KKSSR: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் கேரள சர்வே பண்ணக்கூடாது

Kerala vs Tamil Nadu: கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது என்று கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2023, 02:34 PM IST
  • தமிழக அரசின் அனுமதியோடு கேரள அரசு சர்வே எடுக்கலாம்
  • தமிழக அமைச்சரின் வேண்டுகோள்
  • கேரள அரசின் சர்வே பற்றி எழும்பும் கேள்வி
KKSSR: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் கேரள சர்வே பண்ணக்கூடாது title=

கோவை: கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது - கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார்,மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் தலைமை செயலாளர் வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக 34 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவும், 51 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகையும், 11 பயனாளிகளுக்கு உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் 111 பயனாளிகளுக்கு 23லட்சத்து 19ஆயிரத்து 319ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதன் சாராம்சம் இது.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

ஆர்டிஓ அலுவலகங்களுக்கோ, தாலுக்கா அலுவலகங்களுக்கோ மக்கள் அலையாத படி ஆன்லைனை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விமானநிலைய பணிகள், சிப்காட் பணிகள் நில எடுப்பு பணிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். ஆகவே தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்க முன்னுரிமை கொடுக்க அதிகாரிகளுக்கு சொல்லியுள்ளோம். முதியோர் பென்சன் யாருக்கும் தடங்கல் இல்லாமல் கொடுக்க உத்தரவிட்டுள்ளோம். அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் புதிதாக 6,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதை வழங்குவதாக அமைச்சரிடம் வாக்குறுதி அளித்துள்ளோம். 

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளது. 11 தாலுகா அலுவலகங்கள் தான் உள்ளது. 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுக்கா அலுவலகம் இருப்பது பணி செய்யாத சூழலை ஏற்படுத்துகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

வரும் நிதியாண்டின் பட்ஜெட் தொடரில்  நம்முடைய மாவட்டத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருவாய் தாலுகா அலுவலகங்கள் அமைப்பதற்கான பணியை செய்து கொடுப்போம்.வருவாய் துறை ஆய்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனம் செலுத்துகிறார். ஆன்லைன் பத்திரம் பதிவில் சரியாக இருந்தால் உடனே கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Spy Rat: உளவாளியாக மாறும் எலிகள்! அதிசயமான கற்பனைக்கெட்டாத கண்டுபிடிப்பு

மேலும், பட்டா ,வாரிசு ,முதியோர் தொகை என எதாக இருந்தாலும் 15 நாளுக்குள் தீர்வு கிடைக்கும்.மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும், இ சேவை மையம் குறைவாக உள்ளது. அங்கு சில தவறுகள் நடக்கிறது அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

கேரளா அரசு தமிழகத்தில் சர்வே பண்ண வரும் பொழுது தமிழக அரசின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என கேரள அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். சிப்காட்டிற்கு, யாரையும் கஷ்டப்படுத்தி நிலம் எடுப்பதில்லை என்றும், 25 ஆயிரத்து 150 பேருக்கு புதிய ஆட்சியில் ஒ ஏ பி., வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் 6000 பேருக்கு கொடுக்கிறோம். இந்த அமைச்சர் சண்டை கட்டி வாங்கிவிடுகிறார். கோவை மாவட்டத்திற்கு வலுவான ஆளாக செந்தில் பாலாஜி உள்ளார். நில எடுப்பில் பிரட்சனை வரதான் செய்யும், இருப்பினும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் எடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். முதல்வர் யாரையும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். சர்வேயரில் பாதி போஸ்டிங் இல்லை.வேகமாக பணிகள் நிறைவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News