மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி தேதி! சரிபார்ப்பது எப்படி?

Aadhar Card link: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  இதுவரை இணைக்காதவர்கள் இணைக்க வலியுதப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 28, 2023, 11:29 AM IST
  • நவ.15-ம் தேதி முதல் மின் இணைப்புடன், ஆதாரை இணைத்து வருகின்றனர்.
  • கடந்த டிச.31-ம் தேதி கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது.
  • பிப்.15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி தேதி! சரிபார்ப்பது எப்படி?  title=

தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து நவ.15-ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.  கடந்த டிச.31-ம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது.

மேலும் படிக்க | எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

இதன் பின் ஜன.31-ம் தேதி முதல் பிப்.15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் 7 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்ததன் காரணமாக கால அவகாசம் பிப்.28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  இதையடுத்து இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது.

இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாகும். கடந்த முறை கால நீட்டிப்பு வழங்கிய போது இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  எனவே, மீதமுள்ள மின் பயனாளர்கள், ஆதார் எண்ணை இன்றே இணைக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

மேலும் படிக்க | கனமழையினால் 20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி! தெப்பம் விட்டு வழிபட்ட மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News