எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 27, 2023, 01:50 PM IST
  • 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
  • தமிழகத்தில் வறண்ட வானிலை.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு title=

இன்றைய வானிலை நிலவரம்: தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

27.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்! தற்போது வரை பதிவான வாக்கு விவரங்கள்!

28.02.2023 மற்றும் 01.03.2023 (நாளை, நாளைமறுநாள்) : தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 02.03.2023 மற்றும் 03.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். 

மேலும் படிக்க | Erode bypoll: ஈரோடு கிழக்கு வாக்கு பதிவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க | Erode Election: இன்று வாக்குப்பதிவு! ஈரோடு இடைத்தேர்தல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News