தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு! மக்கள் அவதி!

தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு கொழுப்புச்சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அடியோடு நிறுத்தம் குறைவான அளவில் பச்சை, ஊதா நிற பாக்கெட்டுகள் விநியோகம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 28, 2023, 09:26 AM IST
  • ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
  • கொழுப்பு சத்து நிறைந்த தனியார் பால்களின் விற்பனை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு! மக்கள் அவதி! title=

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகரில் தினசரி 35 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் விநியோகம் 25000 லிட்டராக குறைக்கப்பட்டது பின்னர் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டதுடன், கால தாமதமாக வரும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்த தட்டுப்பாடு குறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் தூத்துக்குடியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இனிமேல் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

அமைச்சர் ஆய்வு செய்து இரண்டு நாட்களிலேயே கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் பச்சை மற்றும் ஊதா நிற பாக்கெட்டுகளை மட்டுமே ஆவின் நிர்வாகம் விநியோகம் செய்து வருகிறது.

மேலும் படிக்க | பாக்கெட் பாலுக்குள் ஈ? பால் குடிக்க கவருக்குள் புகுந்ததா? ஆவினை கலாய்க்கும் வீடியோ

கொழுப்பு சத்து நிறைந்த இந்த ஆவின் பாக்கெட்டுகள் பத்து ரூபாய் பாக்கெட், அரை லிட்டர், பாக்கெட் ஒரு லிட்டர் பாக்கெட் என விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த கொழுப்பு சத்து நிறைந்த  இந்த பாக்கெட்டுகளை குழந்தைகள் முதியவர்கள் மற்றும் டீக்கடைகளில் வியாபாரிகள் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதன் காரணமாக கொழுப்பு சத்து நிறைந்த தனியார் பால்களின் விற்பனை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Adani Group: பங்குச்சந்தையில் 1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு? அதானி பங்குவிலை சரியானதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News