சென்னை கிண்டி அருகே ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது 'தி ஆஸ்ரம்' பள்ளி. ரஜினியின் மனைவி லதா ரஜினி நடத்திவருகிறார்.
இந்த பள்ளி கட்டிடம் அமைந்துள்ள இடமானது வெங்கடேஷ்வரலு என்பவருக்கு உரிமையானது எனவும். கடந்த 5 வருடமாக வாடகை தராமல் ரூ.10 கோடி நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வேளச்சேரியில் உள்ள 'தி ஆஸ்ரம்' ன் கிளையில் மாற்றியுள்ளனர்.
இதனையடுத்து வெங்கடேஷ்வரலு தனக்கு தரவேண்டிய ரூ.10 கொடியினை கேட்டுச் சென்றால் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.
ஒருசில முறை செக் பெற்றுள்ளார் ஆனால் வங்கியில் பணம் இல்லை என செக் பவுன்ஸ் ஆகி உள்ளது. சரியான தகவல்கள் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து வராததால் பள்ளியை மூடும் முடிவுக்கு வெங்கடேஷ்வரலு வந்துள்ளார்.
Official Press Release From #LathaRajinikanth 's #TheAshramSchoolManagement #Rajinikanth #Ashram #TheAshram pic.twitter.com/TL7rxcpcm6
— Kollywood Voice (@kollywoodvoice) August 16, 2017
ஆனால் இதுவரை கிண்டி பள்ளி மூடப்படவில்லை. மூடப்பட்டதாக தற்போது வெளியாகும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.