திமுகவினருக்குள் கோஷ்டி மோதல்-பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம்!

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட வாக்கு சேகரிப்பு  

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2024, 05:40 PM IST
  • திமுகவினருக்குள் கோஷ்டி மோதல்
  • சென்னை எண்ணூரில் நடந்த சம்பவம்
  • பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம்
திமுகவினருக்குள் கோஷ்டி மோதல்-பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம்! title=

எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய குப்பம் சின்னகுப்பம் நெட்டுக்குப்பம் தாழங்குப்பம் ஆகீய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தாழங்குப்பம் பகுதியில் பிரச்சார வாகனத்தில் கலாநிதி வீராசாமி மாதாவரம் சுதர்சனம் இருந்தார்.

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றபோது திருவொற்றியூர் 1வது வார்டின் திமுக மாமன்ற உறுப்பினரான சிவக்குமார் பிரச்சார வாகனத்தில் ஏறி மாலை போட முயன்றார் அப்போது அங்கிருந்த ஊர் மக்கள் மற்றும் மற்றொரு பிரிவை சேர்ந்த திமுகவினர்  சிவக்குமாரை கீழே இறங்க சொல்லியும் வெற்றி பெற்ற பிறகு இந்த பகுதிக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத அவரை அழைத்து கொண்டு வர வேண்டாம் என்றும் முற்றுகையிட்டனர்.

மேலும் படிக்க | சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர், “எதுவாக இருந்தாலும் ஊர் கோவிலில் அமர்ந்து பேசலாம்” என கூறிய பின்னர், அனைவரும் தாழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஊர் கோவிலில் அமர்ந்து பேசினர். அப்போது வெற்றி பெற்றதில் இருந்து மாமன்ற உறுப்பினர் எந்த திட்டத்தையும் நன்மையும் செயல்படுத்தவில்லை எனவும் தங்களின் "வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தர நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் கலாநிதி வீராசாமி வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததையடுத்து கலாநிதி வீராசாமியும் வாக்குறுதி அளித்தார். பின்னர், அனைவரும் ஒன்றாக அந்த பகுதியில் மீண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது சிவக்குமாரின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்த தரப்பில் இருந்தவரை தாக்கியுள்ளனர்.

;இதனால் இருதரப்பும் மோதிக்கொண்ட நிலையில் கலாநிதி வீராசாமி மற்ற நிர்வாகிகளால் அவசர அவசரமாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் சிவக்குமார் தரப்பினரை பாதுகாப்புடன் அந்த பகுதியை விட்டு வெளியே அழைத்து வந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளான மற்றொரு தரப்பு தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனால் பிரச்சாரம் பாதியில் நிறுத்தப்பட்டு சட்ட மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் நிர்வாகிகள் என அனைவரும் அவசரமாக அங்கிருந்து காரில் ஏறி சென்றனர். அந்த பகுதியில் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக காணப்படுகிறது.  முன்னராக கோவிலில் கூட்டம் நடைபெற்று முடிந்த"பிறகு கழுத்தில் அணிந்திருந்த கட்சி துண்டை சிவக்குமார் வாகனத்தில்"இருந்து கீழே இருந்த ஆதரவாளரிடம் தெனாவட்டாக தூக்கி எரிந்தது குறிப்பிடதக்கது. 

மேலும் படிக்க | பல்லடத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News