நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை தேர்தல் பிரச்சார ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் தற்பொழுது புதியதாக உதித்த ஒரு கட்சியை சேர்த்து மும்முனைப் போட்டி நிலவுவதாக மாயத்தோற்றத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தமிழகம் என்றாலே இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. அதில் ஒன்று அதிமுக என தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாஜகவில் இருக்கும் ரவுடிகளை பட்டியல் போட்டு விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை மறந்து விட்டு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கின்றனர் எனவும், அதனால்தான் பாஜகவை விட்டு பிரிந்து தன்னந்தனியே சொந்த காலில் நின்று தேர்தலில் போட்டியிடுகின்றோம் என தெரிவித்தார். தமிழக முதல்வர் எழுதிக் கொடுத்ததை பேசும் பொம்மை முதல்வர் போல் செயல்படுகிறார் என்றும் விமர்சித்தார். ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், கஞ்சா விற்பதிலும் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அதை ஸ்டாலின் தான் வெல்வார் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரை ஆசையை தூண்டவேண்டும் என்று சதுரங்க வேட்டை படத்தில் வசனத்தைக் கூறி தேர்தலின்போது கொடுக்கப்பட்ட 560 தேர்தல் அறிவிப்புகளில் 98 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக மூட்டை மூட்டையாக பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என மூன்று கூட்டணி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ், விசிக என 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி அப்படியே போட்டியிடுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ