திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பழனி சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆயக்குடி, கணக்கன்பட்டி, பால சமுத்திரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்; ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது எனவும், அண்ணாமலை ஜூன் 4 க்கு பிறகு அதிமுகவின் தலைமை மாறுமென குறிப்பிட்டுள்ளது குறித்து கேட்டதற்கு அண்ணாமலை என்ன தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜோதிடரா ? ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவை கைப்பற்ற என்னென்னமோ செய்தார்.
மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு
தொடர்ந்து பேசிய அவர், “இவை அனைத்துமே நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என கூறிவிட்டார். அதற்குக் காரணம் கட்சியின் தொண்டர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர் அவர்கள் எனக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமியை நிரந்தர பொதுச் செயலாளர் என ஏற்றுகொண்டதுதான்” என பதில் அளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ