மாணவர்கள் தவறாக வழி நடத்துபடுகிறார்கள் - அதிமுக ஆர் பி உதயகுமார்!

அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 7, 2024, 03:36 PM IST
  • தமிழக அரசு முற்றிலுமாக செயல் இழந்து விட்டது.
  • மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியவில்லை.
  • முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி.
மாணவர்கள் தவறாக வழி நடத்துபடுகிறார்கள் - அதிமுக ஆர் பி உதயகுமார்! title=

தமிழக பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துகிறோம் என்ற போர்வையில் மாணவர்களை தவறாக  வழி நடத்துகிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மதுரை சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசு முற்றிலுமாக செயல் இழந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் கூடும் போது எல்லாம் கூறினார். ஆனால் அதற்கு அரசு தீர்வு காணாமல் சாக்குப் போக்கு சொல்லி பொதுச் செயலாளர் கூறிய புகார்களுக்கு தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் படிக்க | சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

நேற்று தமிழகத்தில் காட்டுத் தீயாக பற்றி எரிந்தது எதுவென்றால், தமிழக பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சி என்ற போர்வையில் சென்னை அசோக் நகர் பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கில் பள்ளி மேலாண்மை குழு சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. பரம்பொருள் அறக்கட்டளை அமைப்பு சார்பாக மகாவிஷ்ணு என்பவர் உரை நிகழ்த்தினார் முற்பிறவியில் பாவம் புண்ணியம் குறித்து அவர் பேசும்போது சில பெண்கள் அழகில்லாமல் பிறப்பது குறித்து பேசினார். அதற்கு முற்பிறவியில் அவர்கள் செய்த பாவங்களே காரணம் என்று பேசினார். மாணவிகள் அவரது பேச்சில் மூழ்கி இருந்த நிலையில் ஒரு ஆசிரியர் எழுந்து தன்னம்பிக்கை குறித்த உரையில் பாவம் புண்ணியம் பற்றி பேச என்ன அவசியம் என்று கேட்டார். 

இது குறித்து சர்ச்சை தமிழக முழுவதும் பரவியது இந்த சம்பவம் மூலம் அரசு பள்ளி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? ஒரு தனிநபர் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையே திசை திருப்புற நிகழ்வை நாம் பார்க்க முடிகிறது. இதைத்தான் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் பேசும்போது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். கல்வித்துறை அமைச்சர் ஒரு இளைஞர் எல்லா மாவட்டத்திற்கும் அவர் சுற்றுப்பயணம் செய்கிறேன் என்று சொல்கிறார். ஒருபுறத்தில் அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம், அதை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை 

மத்திய அரசு நிதியை பெறுவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, சில தினங்களுக்கு முன்பு பேசியத மிழக தலைமைச் செயலாளர், தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தார் என கூறினார். ஆனால் தற்போது தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எங்களுக்கு நிதி தாருங்கள் என்று சொல்கிறார்கள். இதை பார்க்கும் போது எதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்? மத்திய அரசின் மீது 60 சதவீதம் 40% நான்கு ஐந்து கட்டங்களாக 560 கோடி கொடுக்க வேண்டும் என எடப்பாடி அறிக்கை  வெளியிட்டு கண்டித்துள்ளார். எதிர்க்கட்சி என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே போராட முடியும். ஆனால் திமுக அரசு 39 நாடாளுமன்ற எம்பிக்களை வைத்துக்கொண்டு கல்விக்கு நிதி பெற முடியவில்லை. தற்போது பள்ளிகளில் தன்னம்பிக்கை என்ற பெயரில் மாணவர்களை குழப்புகிற வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிற நிலை ஏற்பட்டு தமிழகம் பதிப்படைந்து உள்ளது என்று பேசினார்.

மேலும் படிக்க | 2026இல் அதிமுக உடன் இணக்கம்? அண்ணாமலை இல்லாத நேரத்தில்... நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News