கோவை தனியார் கல்லூரிக்குள் புகுந்து 2 நாய்களை கொன்ற சிறுத்தை..!

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தின் அருகே இருந்த 2 நாய்களை சிறுத்தை ஒன்று அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 03:56 PM IST
கோவை தனியார் கல்லூரிக்குள் புகுந்து 2 நாய்களை கொன்ற சிறுத்தை..! title=

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவு நேரங்களில் சிறுத்தைகள் அதிகமாக அலைந்து கொண்டிருக்கிறது, இவ்வாறு வீதிகளில் உலாவரும் சிறுத்தைகளை கண்டு அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர பயந்து கொண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர்.

siruthai

மேலும் கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பிள்ளையார்புரம், கோவைபுதூர், குனியமுத்தூர், பி.கே புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து வந்தனர்.  சிறுத்தையின் பயம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியே வருவதில்லை.

siruthia

இந்நிலையில் நேற்று இரவு கோவை குனியமுத்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை அடித்து கொன்றது.  அதனையடுத்து மறுநாள் காலையில்  நாய் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்திருப்பதை கண்ட கல்லூரி ஊழியர்கள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

 

இதனை தொடர்ந்து சிறுத்தையின் கால்தடம் தான் என்பதை உறுதி செய்த வனத்துறையினர், அந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை தற்போது கண்காணித்து வருகின்றனர்.  மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் சிறுத்தை வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.  அதில் சிறுத்தை இரவு நேரத்தில் ஒரு வீட்டின் படிக்கட்டில் மெதுவாக இறங்கி செல்கிறது, இந்த காட்சி காண்போரை கதிகலங்க செய்துள்ளது.  இவ்வாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் சிறுத்தையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ALSO READ | ‘நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News