Permanent Account Number: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? இதை வெறும் 1 நிமிடத்தில் சரிபார்க்கவும், தவறவிட்டால் அபராதம் கட்ட நேரிடும். ரூ. 1000 அபராதத்துடன் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மார்ச் 31 வரை தான் காலக்கெடு உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவான அந்த நாளுக்குள் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், பான் எண் செயலற்றதாகிவிடும்
மத்திய நேரடி வரிகள் வாரியம் CBDT அறிவிப்பு
31 மார்ச் 2023க்கு முன் பான்-ஆதார் இணைப்பது கட்டாயமாகும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பின்படி, ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, பான்-ஆதார் இணைப்பு இல்லை என்றால், அது ரத்து செய்யப்படும்.
1000 அபராதத்துடன் மார்ச் 31 வரை இணைக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், அது செயலற்றதாகிவிடும். கடந்த ஆண்டு CBDT விதிகளை மாற்றியது. மாற்றப்பட்ட விதிகளுக்குப் பிறகு, மார்ச் 31 வரை அபராதத்துடன் இணைக்கலாம்.
10 ஆயிரம் ரூபாய் அபராதம்
மார்ச் 31க்குப் பிறகு, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்களின் பான் கார்டு செயல்படாது. வருமான வரித்துறையின் கூற்றுப்படி, ஒரே பெயரில் 2 பான் கார்டுகளை உருவாக்குவதும் சட்டவிரோதமானது. எனவே உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அது தொடர்பான மாற்றங்களை செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆகும்.
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் படி, பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், நிரந்தர கணக்கு எண்ணை பயன்படுத்த முடியாது. மேலும்,10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் உள்ளது.
பான்-ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்
உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாகிவிட்டதா என்பதைக் கண்டறிவது சுலபம். இதை வருமான வரித் துறையின் இணையதளத்தில் இருந்து சரி பார்க்கலாம்.
படி-1: வருமான வரித் துறையின் இணையதளம் incometaxindiaefiling.gov.in க்குச் செல்லவும். இடது புறத்தில் மேலிருந்து கீழாக பல தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன
படி-2: உங்கள் பான் எண்ணை அறிந்து கொள்ளுங்கள் என்ற விருப்பம் உள்ளது. இங்கே கிளிக் செய்த பிறகு ஒரு சாளரம் திறக்கும். இதில், குடும்பப்பெயர், பெயர், மாநிலங்கள், பாலினம், பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
படி-3: விவரங்களை நிரப்பிய பிறகு மற்றொரு புதிய சாளரம் திறக்கும். உங்கள் பதிவுக்கு OTP அனுப்பப்படும். OTPஐ சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, உங்கள் பான் எண், பெயர், குடிமகன், வார்டு எண் மற்றும் குறிப்பு உங்கள் முன் தோன்றும். உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா இல்லையா என்பது குறிப்பில் எழுதப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!
SMS மூலம் இணைப்பின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
படி 1: செய்தி பெட்டியில் UIDPAN <12 இலக்க ஆதார் எண்> < 10 இலக்க நிரந்தர கணக்கு எண்> என டைப் செய்யவும்.
படி 2: செய்தியை 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும்.
படி 3: சேவையகத்திலிருந்து செய்தி வரும் வரை காத்திருங்கள்.
உங்களிடம் PAN-ஆதார் இணைப்பு இருந்தால், "ஆதார்... ஏற்கனவே ITD தரவுத்தளத்தில் PAN (எண்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி" என்ற செய்தி திரையில் தோன்றும்.
பான்-ஆதார் இணைப்பு இல்லை என்றால், இந்த செய்தி தோன்றும் - "ஆதார்...ஐடிடி தரவுத்தளத்தில் பான் (எண்) உடன் இணைக்கப்படவில்லை."
மேலும் படிக்க | மத்திய ஊழியர்கள் மீது பண மழை! இந்த சலுகையை மோடி அரசு வழங்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ