Live Update: 2022 ஜூன் 21 இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 21.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2022, 08:18 AM IST
Live Blog

 

21 June, 2022

  • 22:00 PM

    பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு

    பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக களம் காணும் திரௌபதி முர்மு, தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 20:45 PM

    ஓ.பி.எஸ் இல்லாமல் பொதுக்குழு கூட்டம் நடத்துவது சட்டப்படி செல்லாது 

    இன்னும் சில மணி நேரங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இல்லாமல் பொதுக்குழு கூட்டம் நடத்துவது சட்டப்படி செல்லாது என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்,

  • 20:30 PM

    தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

     

    தேசிய நெடுஞ்சாலை அப்பாத்தால் கோயில் பிரிவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் நெடுஞ்சாலை துறை டிரைவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... 

     

  • 19:45 PM

    தேர்தல் ஆணையத்தை நாடும் அதிமுகவின் எதிர் தரப்பு

    அதிமுகவின் உட்கட்சிப் பூசலின் அடுத்தகட்டமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாட்விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

  • 18:30 PM

    கல்வி உரிமைச் சட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகளை இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு தள்ளுபடி

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளே இலவசமாக பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி தாளாளர் சடகோபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்படவில்லை எனவும், தாளாளர் என்ற அடிப்படையில் தனிநபர் இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  • 18:15 PM

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு நாளை தள்ளிவைப்பு.

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு நாளை தள்ளிவைப்பு. வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள அனைவருக்கும் மனு நகலை வழங்க மனுதாரர் சூரியமூர்த்திக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜுலை 22 தள்ளிவைப்பட்ட வழக்கை முன்கூட்டி விசாரிக்க கோரி சூரியமூர்த்தி அவசர மனு தாக்கல் செய்திருந்தார். 

  • 17:30 PM

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது: OPS மனு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். நாளை மறுதினம் வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாத என பல்வேறு பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், ஒரு புறம் பொது குழுவிற்கான ஆயத்தப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 17:00 PM

    உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்  

    காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு உத்தரவிட்டும், குடியிருப்பை காலி செய்யாத காவல் துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார்.இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர்  கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

    காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும்,  ஆர்டர்லிகள் வைத்துக் கொள்ளும்  அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதி, அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது எனவும், அது அழிவுக்கு கொண்டு செல்லும் எனவும் எச்சரித்தார்.

  • 16:30 PM

    வானகரம் தனியார் மண்டபத்தில் பொதுக்குழு நடக்கும் இடத்தில் வரவேற்பு பேனர்கள் அமைக்கும் பணி தீவிரம்

    நாளை மறுதினம் வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாத என பல்வேறு பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது குழுவிற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தில் முன்பு பேனர்கள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த முறை சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்யும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுப்பது போன்று பேனர் வைக்கப்பட்டது. அதே போன்று தற்போது ஓபிஎஸ்க்கு இபிஎஸ்சும், இபிஎஸ்க்கு ஓபிஎஸ்சும் பூங்கொத்து கொடுப்பது போன்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறித்த பேனர்கள்  வைக்கப்பட்டுள்ளது. 

     

  • 16:00 PM

    ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார் விஜயகாந்த்

    சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் காரணமாக அவர் கால் விரல் அகற்றப்பட்டது.

  • 15:45 PM

    சென்னை ஐஐடி-யில் 2 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம்

    சென்னை ஐஐடி-யில் 2023-24 கல்வி ஆண்டு முதல் இரண்டு ஆண்டு எம்.ஏ பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதிக மாணவர்கள் ஐஐடி-யில் படிக்கவும், ஐஐடி அதிக மாணவர்களை சென்றடையவும் இந்த  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  • 15:30 PM

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

    ‘ஒற்றை தலைமை குறித்து வெளியில் சொன்னதில் தவறில்லை. திட்டமிட்டப்படி பொதுக்குழு நாளை மறுநாள் நடைபெறும். கட்சியில் நடப்பதை சாதாரண தொண்டன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் வெளியில் கூறினேன். 95% நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர். திட்டமிட்டே ஓபிஎஸ் கடிதத்தை வெளியில் கசிய விட்டார். நீதிமன்றம் சென்றால் உரிய பதிலை அளிப்போம், சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இபிஎஸ் இல்லத்தின் வெளியே பேட்டி அளித்துள்ளார்.

  • 15:00 PM

    பழனி: உணவுத்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    பழனி அருகே தமிழக உணவுத்துறை அமைச்சரை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • 15:00 PM

    பரமக்குடி: போலீசாரால் தேடப்பட்ட நபர் சரண்

    பரமக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட மதுரை கீழ அனுப்பானடியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

  • 15:00 PM

    சென்னை முழுதும் ஒட்டப்படும் போஸ்டர்

    அதிமுகவின் பொதுச் செயலாளரை தன்னிச்சையாக முடிவெடுத்து தேர்ந்தெடுக்க முடியாது என அதிமுகவின் சட்டவிதிகளை மேற்கோள்காட்டி எம் ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்திட்டுள்ள போஸ்டர் ஒன்று தற்போது சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது.

  • 14:30 PM

    பாலத்தின் அடியில் பெண் சடலம்

    போடியில் இருந்து மூணார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டி ஓடை என்ற இடத்தில் பாலத்திற்கு அடியில் உள்ள ஓடை புதரில் மிகவும் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 14:15 PM

    கைபேசியை விடு புத்தகத்தை எடு

    தருமபுரியில் புத்தகத் திருவிழா ஜூன் 24-ஆம் தேதி தொடங்க உள்ளதையொட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைபேசியை விடு புத்தகத்தை எடு என்கிற தலைப்பில் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

  • 14:15 PM

    ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுக-வில் உட்கட்சிப்பூசல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவை தள்ளிவைகக் வேண்டும் என்று ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

  • 14:00 PM

    நீதிமன்ற வளாகத்தில் 8வது சர்வதேச யோகா தினம்

    சிவகங்கை மாவட்டம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • 13:30 PM

    மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

     

  • 13:15 PM

    முன்னாள் அமைச்சர் மா பாண்டியராஜன் இபிஎஸ் ஆதரவு

    திருவள்ளுர் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் இபிஎஸ் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்

  • 12:45 PM

    செஸ் போட்டியில் வெற்றி குறிக்கோளை கொண்டு செயல்படுவதில்லை, தனது திறமையை வெளிப்படுத்துவது வெற்றி ஆகிறது என இந்திய இளம்  செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

     

  • 12:45 PM

    ராகுல் காந்தி  மீது மத்திய அமலாக்கதுறையின் பொய் வழக்கை கண்டித்தும் டெல்லி அலுவலகத்தை பூட்டு போட்டதை  கண்டித்தும் மத்திய அரசு அறிவித்த அக்னிபாத்தை எதிர்த்தும் இன்று தென்காசி மாவட்டம் நன்னைகரத்தில் அமைந்துள்ள மத்திய அமலாக்கதுறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம்  நடைபெற்றது.

     

  • 12:30 PM

    எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் - வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தீர்மானம்

    இரு அணி விவகாரத்தில் பன்னீர் செல்வத்திற்க்கு ஆதரவாகச் செயல்பட்டவர் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது

  • 12:30 PM

    அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நிலவி வரும் நிலையில் ஆளுநர் ரவி நாளை டெல்லி பயணம் 

     

  • 12:15 PM

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் உபரிநீர் திறக்கப்படவுள்ளது, முழு கொள்ளளவை எட்டியதால் இன்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி நீர் திறப்பு - ஆட்சியர் 

  • 11:45 AM

    தொண்டர்களை சந்தித்தார் ஓ.பி.எஸ்

    தன்னுடைய இல்லத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

  • 11:30 AM

    எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா?

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த யஷ்வந்த் சின்ஹா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பா.ஜ.க வேட்பாளர் இன்று அறிவிப்பு

    குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீபாவளிக்கு வெளியாகும் பிரின்ஸ்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அணி மாறும் அதிமுக நிர்வாகிகள் 

    நேற்று வரை ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள், திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தொண்டர்களை சந்திக்கும் ஓ.பி.எஸ்

    அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்க திட்டமிடிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 11:30 AM

    கரையும் ஓபிஎஸ் அணி

    ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 15  இருந்து 10 ஆக குறைவு.

  • 11:15 AM

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக http://tngasa.in, http://tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

     

  • 11:00 AM

    ஓபிஎஸ் ஆதரவாளர் எடப்பாடியுடன் சந்திப்பு 

    ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளரான விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் எடப்பாடி பழனிச்சாமியுடன் இல்லத்தில் சந்திப்பு

  • 11:00 AM

    அமைச்சர் மா. சுப்பரமணியன் விளக்கம்

    பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் சுணக்கம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.

    அதிமுக வழக்கு நாளை விசாரணை

    அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு நாளை விசாரணை. கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் கூடுதல் மனுக்கள் தாக்கல் 

     

     

  • 11:00 AM

    கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா

    இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  • 10:45 AM

    நயினார் நாகேந்திரன் பேட்டி

    அதிமுக தலைமைக்கு திறமை மிக்க ஒருவர் வரவேண்டும். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி என நெல்லையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

  • 10:45 AM

    நெல்லை அதிமுக தீர்மானம்

    அதிமுக ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி விட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நெல்லையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் புறப்பட்டனர். 

  • 10:45 AM

    அதிமுகவில் திருப்பம்

    இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா எடப்பாடி பழனிச்சாமி இல்லம் வருகை.

  • 10:30 AM

    கனிமொழிக்கு கொரோனா தொற்று

    திமுகவின் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

    பொதுக்குழுவை புறக்கணிக்கும் ஓபிஎஸ்?

    ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரும்பாலானோர் இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ராஜ்பவனில் உலக யோகா நாள்

    உலக யோகா நாளையொட்டி சென்னை ராஜ்பவனில் உலக யோகா நாள் கடைபிடிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் கலந்து கொண்டுள்ளார். 

    தமிழக அமைச்சரவைக் கூட்டம்

    ஜூன் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

     

  • 10:30 AM

    அதிமுக பொதுக்குழுவில் பிரச்சனை?

    அதிமுக பொதுக்குழுவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரச்சனை எழுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

  • 10:30 AM

    அதிமுகவை அழிக்க முயற்சி?

    சிலர் அதிமுகவை அழிக்க முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

  • 10:15 AM

    யோகா தமிழகத்தில் இருந்து பிறந்துள்ளது:ஆளுநர் ஆர்.என்.ரவி
    சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யோகா தமிழகத்தில் இருந்து பிறந்துள்ளது என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் என்றார்.

     

  • 09:15 AM

    திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று

  • 09:15 AM

    ஜூன் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என தகவல்

     

  • 09:15 AM

    சென்னை, புறநகரில் கொட்டித் தீர்த்த கனமழை
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 13 செமீ மழை பதிவானது.

  • 08:45 AM

    அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு
    அதிமுக பொதுக்குழுவை நடத்த 2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். 

  • 08:15 AM

    பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Trending News