Live Update: 2022 ஜூன் 27 இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 27.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...  

Written by - RK Spark | Last Updated : Jun 27, 2022, 07:49 AM IST
Live Blog

Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 27.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 

27 June, 2022

  • 21:45 PM

    மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு நகர மன்றத் தேர்தலுக்கு 7 பேர் வேட்புமனுத் தாக்கல்

    மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டில் கடந்த நகர மன்றத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் உயிரிழப்பையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட காலியிடத்துக்கு போட்டியிட வேட்பாளர்கள் மும்முரம். இதுவரை ஏழு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

  • 21:15 PM

    மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு

    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது; தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு (இ.பி.எஸ்) அதிகாரம் இல்லை என்று மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார்.

  • 21:00 PM

    ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

    அதிமுக தொடர்பான எந்த ஒரு வழக்கிலும் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

  • 21:00 PM

    தமிழக அமைச்சரவைக் கூட்டம்: முக்கிய செய்திகள்

    சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துத்துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது தொடர்பான அவசர சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 20:15 PM

    மதுரையில் ரூ.2 கோடி பிட்காயின் மோசடி 

    மதுரையில் 484 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு பிட்காயின் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • 20:00 PM

    திமுகவினர் கோஷ்டி மோதல் நிர்வாகிக்கு மண்டை உடைப்பு

    தேனி மாவட்டம் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி அருகில் உள்ள கொடுவிலார்பட்டியில் 200 பேருக்கு அண்னதானம் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அதில் இரு கோஷ்டியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் திமுக நிர்வாகிக்கு மண்டை உடைந்தது.

    நாற்காலிகள் உடைபக்கப்பட்டு பேனர்கள் கிழிந்து இடமே ரணகளமானது

     

  • 19:30 PM

    அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு மேட்டுப்பாளையத்தில் ஆர்பாட்டம் 

    மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

  • 19:00 PM

    நரிக்குறவ இன மக்களை  இருக்கைகள்  இருந்தும் தரையில் அமர சொன்ன  அதிகாரிகள்  

    சிவகங்கை மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த நரிக்குறவ இன மக்களை  இருக்கைகள்  இருந்தும் தரையில் அமர சொன்ன  அதிகாரிகள் இச்சம்பவம் எதிர்பை கிளப்பி உள்ளது.

    சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 50 நபர்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கை இருந்தும் மாவட்ட அதிகாரிகளால் தரையில் அமர வைக்கப்பட்டனர். இதில் பலர் கைக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்தனர். பொது மக்களை மட்டும்  இருக்கையில் அமர வைத்து இவர்களை தரையில் அமர வைத்தது பாகுபாடு காணப்பட்ட விஷயம் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. சமுக நிதி கூறும் இந்த அரசு  இந்த சம்பவத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

  • 18:45 PM

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

    அதிமுக தொடர்பான எந்த ஒரு வழக்கிலும் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • 17:45 PM

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றக்கோரி சாலை மறியல் 

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றக் கோரி கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,  பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந் நிலையில், குளித்தலை உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாக மாற்றப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இதனை கண்டித்தும், மீண்டும் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றக் கோரி,  குளித்தலை அரசு மருத்துவமனை என்ற பெயர் பலகையை மாவட்ட தலைமை மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்யும் போராட்டம்  இன்று காலை குளித்தலை  சுங்க வாயில் ரவுண்டானாவில் நடைபெற்றது.

  • 17:45 PM

    அரசு மருத்துவமனையில் அனாதைகளாக விட்டு சென்ற 2 பச்சிளம் குழந்தைகள் : மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைப்பு

    ஓசூர் அரசு மருத்துவமனையில் அனாதைகளாக விட்டு சென்ற இரண்டு பச்சிளம் குழந்தைகளை பராமரித்து வந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் இன்று அந்த குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைத்தனர்.

    ஒசூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணிகள் அடுத்தடுத்து ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு பச்சிளம் குழந்தைகளை வார்டுகளில் விட்டு சென்றனர். அனாதைகளாக விடப்பட்ட இந்த பச்சிளம் குழந்தைகள் குறித்து ஒசூர நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அந்த இரண்டு குழந்தைகளையும் ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகமே பராமரித்து பாதுகாத்து வந்தது

  • 17:15 PM

    கேரளாவில் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தயாரிப்பாளர் விஜய் பாபு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  • 17:15 PM

    அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு நடக்கும் மோசடி என்று மேகாலாயா ஆளுநர் விமர்சனம் செய்துள்ளார்.

  • 17:15 PM

    ரூ.171.24 கோடி செலவில் 5 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

     

  • 17:15 PM

    கேரளாவில் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்

  • 17:15 PM

    அதிமுகவின் தற்போதைய நிலை கவலைத் தருவதாக காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

  • 17:00 PM

    ஓபிஎஸ் காவி சால்வை ஏற்றுக்கொண்டது மறைமுகமாக இருந்த பாஜக  சாயம் வெளுத்து விட்டது என அர்த்தம் - எம்பி கார்த்தி சிதம்பரம்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே  அக்னிபாத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ஆண்டிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர் அவருக்கு  காவி நிற சால்வை அணிவித்தா நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அதனை ஏற்றுக்கொண்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சாயம் வெளுத்து விட்டதாக  கிண்டலடித்தார். மேலும், சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னி பாத் திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார் என்றும் கூறினார்.

  • 13:45 PM

    யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • 13:45 PM

    அதிமுக பொதுக்குழு அப்டேட்

    ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இடம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வேறு இடம் பார்ப்பதற்காக எடப்பாடி தரப்பினர் சற்று நேரத்தில் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

  • 13:45 PM

    ஓபிஎஸ் மீது கடும் விமர்சனம்

    பன்னீர்செல்வம் என்பதை கண்ணீர் செல்வம் என தொண்டர்கள் இப்போது அழைக்கின்றனர்" - ராஜன் செல்லப்பா

  • 13:45 PM

    ஏக்நாத் ஷிண்டே பதவி பறிப்பு 

    மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே உட்பட 8 அமைச்சர்களின் இலாகாக்கள் பறிப்பு 

  • 13:45 PM

    "தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடக்கம்" - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

  • 13:00 PM

    வைகோ வலியுறுத்தல்

    கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

  • 13:00 PM

    2  தங்க குண்டு மணிகள் கண்டுபிடிப்பு

    கொல்லங்குடியில் முதுமக்கள் தாழி ஒடுகள் பகுதியில்  தங்கத்தால் ஆன 2 குண்டுமணிகள் கண்டெடுத்து தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு. 

  • 13:00 PM

    மாற்றுத்திறனாளி உயிரிழப்பு 

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட  மாற்றுத்திறனாளி ஊழியர் மன உளைச்சலால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

  • 12:15 PM

    கடம்பூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று 

    முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனோ தொற்று உறுதி. 4 நாட்களுக்குமுன் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது இல்லத்தில் மருத்துவர்கள் ஆலோசனைபடி சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  • 11:45 AM

    ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் - ஜெயக்குமார்

    அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவர் செய்த துரோகங்களுக்கு பல உதாரணங்களைக் கூற முடியும். அதிமுக பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது பொதுக்குழுவில் தெரியும்.

  • 11:15 AM

    ஓபிஎஸ் நீக்கம்?

    அதிமுக பொருளார் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    அதிமுக நடவடிக்கை

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் படத்தை கிழித்தவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது

    அதிமுக ஆலோசனை

    அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  • 11:15 AM

    வேலூர் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரித்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம் ஊராட்சிமன்ற அலுவலகம் முற்றுகையிட்டு சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

  • 10:30 AM

    அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

  • 10:30 AM

    அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தால் ராயப்பேட்டையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

    சென்னை மற்றும் புறநகரை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் வேன்களின் மூலம் ஆட்களை கொண்டு வந்துள்ளதால் கடுமையான நெரிசல்

  • 10:15 AM

    11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

    90.07% பேர் தேர்சி

    8,43,675 பேர் எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி.

  • 10:15 AM

    தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியீடப்பட்டுள்ளது

    தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

  • 09:45 AM

    அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான நமது அம்மாவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் தொடர்பான செய்தியில் சென்னை ராயப்பேட்டையில் என்று தெரிவிப்பதற்கு பதிலாக சென்னை ராயபுரத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று கூட்டம் நடப்பதாக தவறாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.1

  • 09:15 AM

    இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

  • 08:30 AM

    11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது WWW.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • 07:45 AM

    கல்வராயன்மலையில் கவியம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்ற திருக்கோவிலூர் துணை வட்டாட்சியர் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது தவறி விழுந்து உயிரிழப்பு !!

     

  • 07:45 AM

    இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல - OPS

Trending News