சென்னை: 27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 46,639 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் (Local Body Election) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. சில பகுதிகளில் மாலை 7 மணி வரையும் நடந்தது. 5 மணிக்கு முன்பாகவே வந்து வரிசையில் நின்றிருந்த வாக்காளர் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கபட்டது. இரண்டாம் கட்டத் தேர்தலில் 77.73 சதவிகிதம் வாக்குப்பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் (Election Commision) அறிவித்துள்ளது. அதபோல மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 30 வாக்குசாவடிகளில் 72.70 சதவீதம் வாக்குகள் பதிவானது எனவும் கூறப்பட்டு உள்ளது. முன்னதகா
இன்று நடைபெற்ற 46,639 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.
முன்னதாக ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான முதல்கட்டத் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப் பதிவு கடந்த 27 ஆம் தேதி முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.
9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள காஞ்சீபுரம், வேலூர், வில்லுபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குரிச்சி மற்றும் தென்காசி போன்ற ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து, பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 என இரு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 29 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால், முழு தேர்தல் முடிவு வெளியாக மேலும் ஒரு நாள் ஆகலாம் என்பதால், ஜனவரி 3 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு தமிழக அரசு (TN Govt) சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது