உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை விதிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 19, 2019, 07:00 PM IST
உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை விதிப்பு title=

சென்னை: தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்நிலையிலே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதற்காக இப்போதே தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்துள்ளது. ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக பொங்கல் பரிசை தற்போது வழங்க ஏற்பாடு செய்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார்கள். 

இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களை தவிர்த்து, தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என மாநில தேர்த ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு விநியோகச் செய்யப்படும்.

Trending News