முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு விசாரணை அடுத்த வாரம்- Madras HC

டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று சென்னை உச்சநீதிமன்றம் கூறுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2022, 04:29 PM IST
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு விசாரணை அடுத்த வாரம்- Madras HC title=

சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று சென்னை உச்சநீதிமன்றம் கூறுகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர், தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

ALSO READ | வேலுமணிக்கு எதிராக 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு (Tamil Nadu) லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி, நகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தான் எப்போதும் தலையிட்டதில்லை எனவும் வேலுமணி குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் போடப்பட்டுள்ளதாகவும், டெண்டர் விவகாரங்களில் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Also Read | கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்

தற்போது மாறியுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடித்து வைக்கப்பட்ட டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை, வேண்டுமென்றே மீண்டும் தொடங்க முயல்வதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். 

எனவே, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் இருந்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய தனது மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு ஆஜராகி முறையிட்டார்.

அந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, அடுத்த வாரம் வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக ஒப்புதல் அளித்தார்.

முன்னதாக, தங்களது தரப்பு வாதங்கள் கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் கேவியட் மனுவை தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ 39 கோடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News