பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, 80 பவுன் நகை மற்றும் 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. இந்த வழக்கில் முன் ஜாமீன்கோரி சக்கரவர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், பெண் டாக்டர் அளித்த புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பெண் டாக்டர் தரப்பில் 17-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும், சக்கரவர்த்திக்கு முன் ஜாமீன் கொடுக்க கூடாது என்று இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாதங்களின் அடிப்படையில் சக்கரவர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி டீக்காராமன், திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுவதாக தெரிவித்தார். இதுபோன்ற இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
திருமண இணையதளங்களில், பதிவு செய்யும் ஆணோ அல்லது பென்ணோ தங்களின் பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால், மோசடிகள் தடுக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமண தகவல் இணைதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ