வயிற்றில் வளரும் கருவை கலைக்க மருத்துவர் ஒப்புதல் தேவையில்லை: HC

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண் கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவரை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Updated: Jun 22, 2019, 09:48 AM IST
வயிற்றில் வளரும் கருவை கலைக்க மருத்துவர் ஒப்புதல் தேவையில்லை: HC

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண் கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவரை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வற்புறுத்துவதாக, பாலியல் வன்கொடுமையால் உருவான கருவைக் கலைக்க, சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது வயிற்றில் உள்ள 8 முதல் 10 வாரம் வரையிலான கருவை கலைக்க கோரி உயர்நீதிமண்டர்த்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த பெண்ணை காவல்துறையினர், திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்பெண்ணுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழு தான் கருவை கலைக்க முடிவு செய்ய முடியும் எனக்கூறி கடிதம் கொடுத்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மத்திய அரசு சட்டப்படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டும் என்றும், கருக்கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருக்கலைப்பு குறித்து, போலீசாருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.