மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம்

அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை சொந்த தந்தையே கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2022, 03:19 PM IST
  • பணம் கேட்டு தொல்லை செய்த மகன்.
  • மகனை கொன்று வீசிய தந்தை.
  • விசாரணையில் வெளிவந்த விவரங்கள்.
மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம் title=

அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை சொந்த தந்தையே கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்தார். திருமணம்  ஆகாத நிலையில் இவர் தந்தையுடனே வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் காளியப்பனின் மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்று எண்ணி, அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு தந்தை மகன் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் மகன் பெரியசாமி தனது தந்தையை தாக்க முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காளியப்பன் தனது மகன் பெரியசாமியை கீழே தள்ளிவிட்டபோது அங்கிருத்த கல் ஒன்றின் மீது பெரியசாமியின் தலை மோதியதில் பலந்தகாயமடைந்து, பெரியசாமி உயிருக்கு போராடியுள்ளார். காளியப்பன் தேவையான மருத்துவ சிகிச்சையை நாடாமல் போகவே பெரியசாமி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க | விக்னேஷ் லாக்கப் டெத் : 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவு.! 

அதனைத்தொடர்ந்து, காளியப்பன் இறத்த மகனின் உடலை சாக்கு ஒன்றில்  மூட்டையாக கட்டி  தோளில் சுமந்து சென்று அருகே உள்ள கீழ்பவானி வாய்காலில் வீசிய பின் வீட்டிற்கு வந்து விட்டார். இச்சம்பவம் நடந்து இரண்டாவது நாளில் காளியப்பன் தனது மகன் பெரியசாமியை காணவில்லை என திங்களூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்காலில் ஆண் உடல் மிதப்பதாக திங்களூர் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது அது காணமல் போனதாக கூறப்பட்ட பெரியசாமி என்பவரது உடல் என விசாரணையில் தெரிய வந்தது.

இறந்த பெரியசாமியின் தலையில் இருந்த காயங்கள் குறித்து அவரது தந்தையிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் தன் மகன் உயிரிழப்பதற்கு தானே காரணம் என ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இறந்த பெரியசாமியின் உடல் பிரேத பரிசோனைக்காக  பெருந்துறை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 

மகனை கொலை செய்த வழக்கில்  காளியப்பனை கைது செய்த திங்களூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் படிக்க | பாலியல் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News