புதுடெல்லி: தமிழ்நாட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயரும் என ஏற்கனவே சிவகாசி தீப்பெட்டி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இன்று முதல் தீப்பெட்டி (Matchbox) விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருவதால், மூலப்பொருட்களின் விலை உயர்வதே இதற்கு காரணம். வரவிருக்கும் இந்த விலை திருத்தத்திற்குப் பிறகு, தீப்பெட்டிகளின் சில்லறை விலை, டிசம்பர் 1, 2021 முதல் தற்போதைய விலையான 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக இரட்டிப்பாகும்.
ALSO READ | 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்தது தீப்பெட்டி விலை: காரணம் விலைவாசி
தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தீப்பெட்டியின் விலை, ஒரு பெட்டிக்கு ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன.
14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலை உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, தீப்பெட்டி தயாரிக்க 14 வகையான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் இவற்றில் பல பொருட்களின் விலைகள் இருமடங்கு அதிகமாகி, தீப்பெட்டி உற்பத்தியின் செலவுகள் (Price Rise) அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில் இதுவரை ஒரு ரூபாயாக விற்பனையாகிக் கொண்டிருந்த தீப்பெட்டி விலை இன்று முதல் இரண்டு ரூபாயாக உயர்ந்துள்ளது.
ALSO READ: 7th Pay Commission பம்பர் செய்தி: மீண்டும் உயர்ந்தது அகவிலைப்படி, ஒப்புதல் அளித்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR