7th Pay Commission Latest Update: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் பண்டிகை பரிசாக, மத்திய அமைச்சரவை 3 சதவீத அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை சம்பளம் /ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 28 சதவீத
அகவிலைப்படியுடன், தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 சதவிகித அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணமும் (டிஆர்) சேரும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ .9,488.70 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலை நிவாரணத்தை 11% அத்கரித்தது. இதன் மூலம் 17% ஆக இருந்த அகவிலைப்படி 28% ஆக அதிகரித்தது. இது 01.07.2021 முதல் அமலுக்கு வந்தது.
கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட முன்னோடியில்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021-ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அரசு முடக்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலை நிவாரணத்தை 01.07.2021 முதல் 28% ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த அரசு ஊழியர்களுக்கு தற்போது மத்திய அரசு மீண்டும் ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3% அகவிலைப்படி அதிகரிப்புக்கு தற்போது அரசு ஒப்புதல் அளித்து விட்டது.
இந்த அதிகரிப்பு 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021-ல் வரும் கூடுதல் தவணைகளை பிரதிபலிக்கிறது. 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலப்பகுதிக்கான அகவிலைப்படி / அகவிலை நிவாரணத்தின் விகிதம் 17%ஆக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR