close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

MBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்!

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!!

Updated: Jul 1, 2018, 11:26 AM IST
MBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்!

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!!

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று காலை துவங்கியது. முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் ஒரு பி.டி.எஸ். இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது.