22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி தான், வடநாட்டு மொழி அல்ல -வைகோ!

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள முடிவு வரவேற்கக்கூடியது ஆனால் 22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியை தவிர்த்து வரும் இந்த முடிவு ஏற்புடையது அல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.

Last Updated : Jul 4, 2019, 02:30 PM IST
22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி தான், வடநாட்டு மொழி அல்ல -வைகோ! title=

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள முடிவு வரவேற்கக்கூடியது ஆனால் 22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியை தவிர்த்து வரும் இந்த முடிவு ஏற்புடையது அல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது., "உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த முடிவு வரவேற்கக்கூடியது ஆனால் 22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியை தவிர்த்து வரும் இந்த முடிவு ஏற்புடையது அல்ல.

உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழிதான். அந்த 5 மொழிகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த பிரச்சினையை எடுத்துச் செல்லக்கூடிய கடமை தமிழக அரசுக்கும், சட்டத் துறை அமைச்சருக்கும் உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். மாநில அரசு அதையெல்லாம் தடுத்து நிறுத்தப் போவதில்லை. 224 கிணறுகள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தோண்டப்பட உள்ளது. 10,000 அடி வரையில் பல வேதிப் பொருட்களை சேர்த்து அந்த தண்ணீரை வேகமாக பூமிக்கு செலுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் தமிழ்நாடு அடியோடு நாசமாகிவிடும். பல்வேறு மாவட்டங்கள் அடியோடு அழிந்து போகக் கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு முறையும் இதை நான் ஊர் ஊராக சென்று சொல்லி வருகிறேன். அமெரிக்கா போன்ற நாடுகளை இந்த முறையை அடியோடு தடை செய்துள்ளது.
 
ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வருவது ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பது மட்டுமல்ல. ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே மதம் இதுதான் RSS-ன் அடிப்படை. இதனால் இந்திய ஒருமைப்பாடு சிதையும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டிற்கு வரும் என்னற்ற ஆபத்துக்களை தடுத்து நிறுத்துவதற்கு நாம் துணிந்து இணைந்து போராட வேண்டும் என தெரிவித்தார்.

Trending News