சென்னையில் குளிர் காற்று.... காரணத்தை விளக்கிய வானிலை ஆய்வு மையம்

சென்னையில் கடும் குளிர் நிலவுவதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 23, 2022, 12:58 PM IST
  • சென்னையில் குளிர் அதிகம் இருக்கிறது
  • இயல்பைவிட அதிகமான குளிர் நிலவுகிறது
  • அதுகுறித்த வானிலை ஆய்வு மையத்தின் விளக்கம்
சென்னையில் குளிர் காற்று.... காரணத்தை விளக்கிய வானிலை ஆய்வு மையம் title=

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை இருக்கும். ஆனால் இந்த முறை மழையைவிட குளிர் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த 4 தினங்களாக கடும் குளிர் நிலவிவருகிறது. மாலை வேளை மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் குளிர் இருப்பதால் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்.இதனால் சென்னையா இல்லை ஊட்டியா என பலர் குழம்பித்தான் போகிறார்கள். மேலும் நெட்டிசன்களோ அதுதொடர்பாக மீம்ஸ்கள், போஸ்ட்கள் என சமூக வலைதளங்களை அலறவிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலும் பனிப்பிரதேசங்களில் தங்களது புகைப்படங்களை எடிட் செய்து சென்னையில் இருக்கும் பகுதிகளை குறிப்பிட்டு பகிரும் பதிவுகள் அனைத்தும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.

கடந்த இரு தினங்களில் சென்னையில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 25. 6 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நிலவும் இந்த கடும் குளிருக்கு என்ன காரணம் என மக்களுக்கு மிகப்பெரும் கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் குளிர் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்திருக்கும் விளக்கத்தில், வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்துள்ளது. 

மேற்கு வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு வட திசையில் இருந்து தரை காற்று வீசியது. குறிப்பாக மணிக்கு 40 கி.மீ வேகம் வரையில் காற்று வீசியது. இதன் காரணமாக வெப்பநிலை இயல்பைவிட குறைந்தது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் வானிலை ஆய்வு நிலையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அதிகபட்ச வெப்பநிலை 23° செல்சியஸாக குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையும் 5°செல்சியஸ்வரை இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 அக்டோபரில் முடிக்கப்படும்: மத்திய அரசு

மேக குவியல்கள், மேக மூட்டங்கள் இல்லாத காரணங்களால் பூமிக்கு வந்து திரும்பும் ரேடியேஷன் கதிர்கள் அதிகளவில் வெளியேறியுள்ளன. வட திசை காற்று, அதிக வேகமான தரைக்காற்று, அதிகளவில் பூமியில் இருந்து திரும்பிய ரேடியேஷன் கதிர்கள், குறைந்த அளவிலான வெப்பநிலை உள்ளிட்டவை காரணமாகத் தான் சென்னையில் தட்பவெப்பம் குறைந்து மிகவும் குளிர்ந்த நிலை உணரப்பட்டது. அடுத்த இரண்டு தினங்களுக்குள் இயல்பான தட்பவெப்பநிலை திரும்பும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நான் செய்த தவறுதான் என்ன... மனம் திறக்கும் காயத்ரி ரகுராம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News