ஒய்யார நடையில் ஊருக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த பாகுபலி - என் வழி தனி வழி

Elephant : மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் ஒருமாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஊருக்குள் காட்டு யானை பாகுபலி

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 29, 2022, 12:07 PM IST
  • எவ்வித அச்சமும் இன்றி இயல்பான ஒய்யார நடை
  • இதுவரை இந்த பாகுபலி மனிதர்களை தாக்கியதில்லை
  • அறிவாளி யானை - சாலை கடக்க என்ன செய்கிறது பாருங்க
ஒய்யார நடையில் ஊருக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த பாகுபலி -  என் வழி தனி வழி title=

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம்,ஓடந்துரை,குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். 

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டுயானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் இந்த யானையை அடர் வனத்தினுள் விரட்ட வலியுறுத்தி வருகின்றனர்.இருப்பினும் யானை பாகுபலியை வனத்துறையினரை என்னதான் விரட்டினாலும் இது என் ஏரியா என்ற நினைப்புடன் தொடர்ந்து தான்வந்து செல்லும் பாதையாகவே சமயபுரம் சாலையை பயன்படுத்தி வருகிறது.

நெல்லிமலை வனப்பகுதிக்கும் கல்லார் வனப்பகுதிக்கும் இடையே செல்ல இந்த சமயபுரம் கிராம சாலை வழியாக வருவதை காட்டுயானை வழக்கமாக கொண்டுள்ளது இருப்பினும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடமாடி வந்தாலும் இதுவரை இந்த பாகுபலி மனிதர்களை தாக்கியதில்லை.

இந்த நிலையில் இந்த காட்டு யானை கடந்த ஒரு மாதகாலமாக சமயபுரம் பகுதியில் அதன் நடமாட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது ஒருமாத இடைவேளைக்கு பிறகு மீண்டும் குடியிருப்புகள் நிறைந்த சமயபுரம் பகுதிக்கு வந்தது. கல்லார் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்ல சமயபுரம் குடியிருப்பு சாலையில் புகுந்து நெல்லிமலைக்கு சென்றது. 

மேலும் படிக்க | போர்வையை பேய் என நினைத்து பயந்து ஓடிய யானைக்குட்டி!

அதிகாலையில் எவ்வித அச்சமும் இன்றி இயல்பான தனது ஒய்யார நடையில், பாகுபலி சமயபுரம் சாலையில் நடமாடியதை கண்டு கிராம மக்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை மூடி கொண்டனர். பின்னர் அந்த யானை மெதுவாக சாலையை கடந்து மேட்டுப்பாளையம் பத்தரகாளியம்மன் பிரதான சாலையை கடக்க வாகனங்கள் வருகிறதா என ஒரு நிமிடம் நின்று பார்த்து கவனித்து அதன்பின் வனப்பகுதிக்குள் சென்றது.

மேலும் படிக்க | நீ சுற்றுலா வந்தது எனக்கு பிடிக்கல: பயணியை விரட்டும் கோபக்கார யானை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News