DA HIKE: தமிழகத்தில் டிஏ உயர்வு எப்போது? உயர்த்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்

DA HIKE Demand: அகவிலை படியை உயர்த்தி வழங்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 11, 2023, 05:19 PM IST
  • அகவிலை படியை உயர்த்தக் கோரும் பால் உற்பத்தியாளர் சங்கம்
  • தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது?
  • டிஏ உயர்த்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்
DA HIKE: தமிழகத்தில் டிஏ உயர்வு எப்போது? உயர்த்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் title=

சென்னை: அகவிலை படியை உயர்த்தி வழங்காவிட்டால் தொடர் போராட்டங்கள் செய்யப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு கடந்தஜூலை மாதம் அரசு ஊழியர் களுக்கான அகவிலை படி யை 3 சதவிகிதம் உயர்த்தியது. அந்த அகவிலைப்படி உயர்வு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய  ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி முதலாம் தேதி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மேலும் 4% ஆக அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொத்தம் ஏழு சதவிகித அகவிலைப்படி வரும் நிலையில், இதுவரை அந்த டிஏ உயர்வு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் ஊழியர்களுக்குக் கிடைக்கவில்லை.  ஏழு சதவிகித அகவிலை படி உயர்வை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஊழியர்களுக்கு தாமதம் இன்றி வழங்கிட வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைந்துள்ள ரெட்டியார் பட்டி தலைமை அலுவலகம் முன்பு, பிரான்சிஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு 

போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஊழியர்கள், தமிழக அரசு எங்களது கோரிக் கையை ஏற்காத பட்சத்தில் வருகிற 23ஆம் தேதி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், பிப்ரவரி மாதம் நான்காம் தேதி காலை முதல் மாலை வரை அடையாள உண்ணா விரதப் போராட்டத்தை நடத்த போவதாகவும்தெரிவித்தனர்.

அதையடுத்து வருகிற பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், மார்ச் மாதம் மூன்றாம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைத் தொடர்பாக, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பணியாளர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு கோரி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தியது. அப்போதிலிருந்து, ஏழாவது ஊதியக் குழுவும் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News