நிறைய பேர் மேக்கப் போட்டுக்கொள்வது ஆரோக்கியம் - அமைச்சர் மதிவேந்தன்

மேக்கப் போட்டுக்கொள்ள அனைவரும் அதிக ஆர்வம் செலுத்தி வருவது ஆரோக்கியமான விஷயம் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 2, 2022, 06:06 PM IST
  • அழகியல் பயிற்சி மையம் சென்னையில் தொடங்கப்பட்டது
  • அமைச்சர் மதிவேந்தன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்
  • மேக்கப் போட்டுக்கொள்வது ஆரோக்கியமான விஷயம் என்றார்
நிறைய பேர் மேக்கப் போட்டுக்கொள்வது ஆரோக்கியம் - அமைச்சர் மதிவேந்தன் title=

சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில்  ஏ.ஐ.எம்.எஸ் அழகியல் பயிற்சி மையத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். அதன் பிறகு, மேடையில் பேசிய அவர், “ ஒரு மருத்துவர் என்கிற முறையில் அழகியல் பயிற்சி மையம் தொடங்குவது நல்ல முயற்சியாக கருதுகிறேன். தோல் பராமரிப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை யாரும் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. தான் கல்லூரியில் படித்த காலங்களில் ஓரிரு பெண்கள் மட்டுமே லிப்ஸ்டிக் போட்டு வருவார்கள். இப்போது அனைவரும் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அது நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். தோல் பராமரிப்பு தொடர்பாக கற்றுக்கொடுக்கும் இந்த பயிற்சி மையம் நல்ல முயற்சி” என்றார்.. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மைய இயக்குநர் வசந்த் ராஜகுரு, “ஏ.ஐ.எம்.எஸ் பயிற்சி மையத்தில் தோல் பராமரிப்பு, முகப்பரு சிகிச்சைகள், தழும்பு நீக்கம், தேவையற்ற ரோமங்களை நீக்குதல், உடல் வடிவமைப்பு, அழகியல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் வழங்கப்பட உள்ளது. தோல் பராமரிப்பிற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், சர்வதேச அளவில் நடைமுறை சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சைக்கான பயிற்சியை வழங்குவதால் இது பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு கூடுதல் சிறப்பைக் கொடுக்கும்” என்றார். இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் அதுல்யா ரவி,தர்ஷா குப்தா, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | டிசம்பர் 5லிருந்து 8வரை உஷாரா இருங்க மக்களே... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மேலும் படிக்க | தாழ்த்தப்பட்ட மாணவர்களை கழிவறையை கழுவ சொல்வதா?... பெரியார் பிறந்த ஈரோட்டில் இப்படி ஒரு கொடுமை

மேலும் படிக்க | பொம்மை முதலமைச்சரே இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் - வேலுமணி நடத்திய போராட்டத்தில் இபிஎஸ் பேச்சு

மேலும் படிக்க | சென்னை டூ கத்தார் : விமானியின் சாமர்த்தியத்தால் தப்பித்த 146 உயிர்கள்... ஏர்போர்டில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News