சென்னை உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகிய 3 பேரும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்கேநகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் தந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
அப்போது ரூ.89 கோடி வரை ஆர்கேநகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது.
இந்நிலையில் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி மூவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.