மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023: பட்டத்தை வென்ற வீரர்-வீராங்கனை யார் தெரியுமா?

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 போட்டி கோவாவில் நடிப்பெற்றது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 27, 2023, 03:53 PM IST
  • மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் போட்டி கோவாவில் நடைப்பெற்றது.
  • ஆஷ்னா சாவேரி மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெற்றவர்கள் யார் யார் தெரியுமா?
மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023: பட்டத்தை வென்ற வீரர்-வீராங்கனை யார் தெரியுமா?  title=

கோவாவில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 போட்டியில் கார்த்திகேயன் ராஜா மற்றும் சுப்ரியா ஆகியோர் பட்டத்தை வென்றனர்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.  இதில் மிஸ்டர் தமிழகம் 2023 பட்டத்தை கார்த்திகேயன் ராஜா கைப்பற்றினார். 2 வது இடத்தை விஜேஷ் மற்றும் 3 வது இடத்தை பாலகுமார் ஆகியோரும்  வென்றனர். 

மேலும் படிக்க | திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன?

மிஸ் தமிழகம் 2023 பட்டத்தை சுப்ரியா கைப்பற்றினார். 2 வது மற்றும் 3 வது  இடங்களை சூரிநெட்டி அனுஷா மற்றும் மஹன்யா ஆகியோர் வென்றனர்.  வெற்றி பெற்றவர்களுக்கு நடிகைகள் ஜனனி, ஆஷ்னா சவேரி, சஞ்சிதா ஷெட்டி, ரம்யா சுப்பிரமணியன் நடிகர் விஸ்வநாத் உத்தப்பா, Big Bull அர்விந்த் உள்ளிட்டோர் கிரீடம் அணிவித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக,   ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக  பொள்ளாச்சியில் செயல்படும் நியூ பிரிட்ஜ் மையத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. 

Mr and Miss Thamizhagam

நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியன் மீடியா ஒர்க்ஸின், ஜான் அமலன், புதிய முகங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதே தங்கள் நோக்கம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் ஃபேஷன் துறையின் புதிய வாய்ப்புகளை பெற முடியும் எனவும், இந்நாட்டின் புதிய நட்சத்திரங்களை இந்த போட்டி உருவாக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.  இந்தியன் மீடியா ஒர்க்ஸின் 3 வது மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் வி.பி.சிங் சிலை... முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News