16:18 26-08-2018
திமுக தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் MK ஸ்டாலின்!
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் பொருப்பிற்கு MK ஸ்டாலின் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில், திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி அவர்கள் ஸ்டாலின் அவர்களின் வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.
65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
அதேவேலையில் திமுக-வின் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் அவர்களும் வேட்புமனை தாக்கல் செய்தார்.
கழக தலைவர் பதவிக்கு தளபதி @mkstalin அவர்களும், பொருளாளர் பதவிக்கு @DuraimuruganDmk அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்,அதனை 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்தனர். சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் நாங்களும் தாக்கல் செய்தோம். 28ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும். pic.twitter.com/I89COKtFKX
— J Anbazhagan (@JAnbazhagan) August 26, 2018
தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேப்போல் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக துரை முருகன் அவர்கள் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
முன்னதாக, பொதுச்செயலாளர் கே.அன்பழகன் அவர்களிடம் வாழ்த்துப்பெற்ற MK ஸ்டாலின் அவர்கள், அதைத்தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.