சென்னை: விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் (Airport Privatisation) மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக (DMK) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலங்களின் உரிமைகளையும் சுயாட்சியையும் பறிக்கும் வகையில் இருக்கும் என திமுக குறிப்பிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் உட்பட மூன்று விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறித்து கூறுகையில், திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் (MK Stalin) இந்த முடிவை ஒருதலைப்பட்சமான முடிவு என்று விவரித்து, அதை ரத்து செய்யக் கோரினார்.
"விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு மாநிங்களின் உரிமைகளையும் சுயாட்சியையும் பறிக்கிறது" என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
The Center's unilateral decision to privatise airports usurps the rights and autonomy from the State.
It violates the pledge made in 2003 that any proposal concerning airport privatisation would be made only in consultation with the state government and must be revoked. https://t.co/wd3hfPapoh
— M.K.Stalin (@mkstalin) August 21, 2020
விமான நிலைய தனியார்மயமாக்கல் தொடர்பான எந்தவொரு திட்டமும் மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து மட்டுமே செய்யப்படும் என்று 2003 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட உறுதிமொழியை மீறும் வகையில் இது உள்ளது என்றும், இது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் திரு ஸ்டாலின் மேலும் கூறினார்.
பாஜக (BJP) தலைமையிலான என்டிஏ அரசாங்கம் ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறை மூலம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முடிவு செய்திருந்தது. இது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
தற்செயலாக, கேரளாவில் ஆளும் சிபிஐ-எம் வியாழக்கிழமை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி திருவனந்தபுரத்தில் விமான நிலையத்தை குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை முடிவை திரும்பப் பெறக் கோரியது.
லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை இயக்கும் உரிமையை அதானி எண்டர்பிரைசஸ் வென்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஏல முறைக்குப் பிறகு PPP செயல்முறை மூலம் அதானி நிறுவனம் இந்த உரிமையைப் பெற்றது.
ALSO READ: பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை!! ஸ்விக்கி ஊழியர்களுக்கு தீர்வு வேண்டும்: MKS