அதிமுக பொதுக்குழு - முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது என்ன?

அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 23, 2022, 01:39 PM IST
  • அதிமுகவின் பொதுக்குழு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
  • வருவாய் துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமணம் இன்று நடந்தது
 அதிமுக பொதுக்குழு - முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது என்ன? title=

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இல்ல திருமண விழா இன்று திருவான்மியூரில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அதனையடுத்து விழாவில் பேசிய அவர், "இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறோம். இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை.

அதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்திருக்கின்றனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்” என்றார்.

மேலும் படிக்க | தண்ணீர் பாட்டில்கள் வீச்சு... பஞ்சர் செய்யப்பட்ட கார்; பொதுக்குழுவிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ்

முன்னதாக வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் இபிஎஸ், ஓபிஎஸ் என இருவருமே கலந்துகொண்டனர். ஒற்றைத் தலைமையை நீதிமன்றத்தின் தீர்ப்போடு தடுத்துவிடலாம் என்ற ஆவலில் இருந்தார் ஓபிஎஸ். 

Panneerselvam

ஆனால் கட்சியில் இருக்கும் முக்கால்வாசி பேர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஒற்றைத் தலைமையை வலியுறுத்தினர். அதில் முன்னொரு காலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முனுசாமியும் ஒருவர்.

மைக் பிடித்தவர்கள் தொடர்ந்து ஒற்றைத் தலைமை குறித்தே பேசிக்கொண்டிருந்தனர். இதனால் ஓ. பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியடைந்தார். இதனையடுத்து, சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு இது என கூறி அவரும், அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழுவிலிருந்து வெளியேறினர்.

மேலும் படிக்க | ஏ சும்மா இருய்யா... மாலை போட்ட நிர்வாகியிடம் கடிந்துகொண்ட இபிஎஸ்

அதுமட்டுமின்றி ஓபிஎஸ்ஸின் வாகனம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களால் பஞ்சர் ஆக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களும் காகிதங்களும் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலைமை இப்படி இருக்க அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூடவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன - பொதுக்குழு மேடையில் ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த மாஜி அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News