கிண்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு அவரது 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு மாலை அணிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுவாக அதிமுக ஆட்சிக்கு வந்தால், திமுக சார்ந்த கட்சி தலைவர்களை புறக்கணிப்பதும், திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக சார்ந்த கட்சி தலைவர்களை புறக்கணிப்பதும் வழக்காமான ஒன்றே.
ALSO READ | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த விஜய நல்லதம்பி கைது
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமை செயலகம் என்பதற்க்காக 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அங்கு செல்லாமல், அதனை மருத்துவமனையாக மாற்றி அமைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இரண்டு கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மற்ற காட்சிகளில் உள்ள தலைவர்களில் மீது கைது நடவடிக்கையும், அரசியில் பழிவாங்கும் நிகழ்வுகளே நடக்கும். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்த போது கூட, அவரை புதைக்க அதிமுக அரசு இடம் தரவில்லை. பிறகு நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கியது திமுக.
இத்தகைய பல சம்பவங்கள் உள்ள நிலையில் தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் தலைவரின் சிலைக்கு திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மாலை அணிவிக்க உள்ளார். இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதுமையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் புதியதாக திறக்கப்பட்ட செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தை பார்வையிட்டு, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசும் கலந்து கொள்ள உள்ளார். பெரும்பாக்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கடந்த 12.1.22 ஆம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் காணொலி காட்சி மூலம் புதியதாக திறக்கப்பட்டது.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR