திமுக எம்.பி திருச்சி சிவா ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதி

MP Trichi Siva under Treatment: உடல்நலக் குறைவால் திமுக எம்.பி திருச்சி சிவா, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2022, 11:13 AM IST
  • புதுடெல்லி மருத்துவமனையில் தமிழக எம்பிக்கு சிகிச்சை
  • திமுக எம்பி ஆர்.எம்.எல் மருத்துவனமையில் அனுமதி
  • திருச்சி சிவாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
திமுக எம்.பி திருச்சி சிவா ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதி title=

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் உள்ளனர். திமுக எம்.பி திருச்சி சிவாவும் டெல்லியில் இருக்கிறார். இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் திமுக எம்.பி திருச்சி சிவா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி சிவா அவர்களுக்கு ஏற்கனவே தோள்பட்டையில் வலி இருந்துவந்த நிலையில், நேற்று வலி அளவுக்கு அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் மாநிலங்களவை எம்பியான திருச்சி சிவா, 1996, 2002, 2007,2014 மற்றும் 2020 என ஐந்து முறை  நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் பணியாற்றிவருகிறார். 

மாநிலங்களவை துணைத் தலைவர்களில் ஒருவராக திருச்சி சிவா சில தினங்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையின் விதிகளுக்கு உட்பட்டு, ஆறு பேர் அவையின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமன, ஜுலை 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுகவின் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதோடு, மத்திய மண்டலத்தில் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க | திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகருமான சூர்யா கைது

திருச்சி சிவாவின் மகன், திமுகவின் எதிரி கட்சியாக கருதப்படும் பாஜகவில் சில மாதங்களுக்கு முன்னதாக இணைந்ததால், திருச்சி சிவாவுக்கும், மகன் சூர்யாவுக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் இந்த கட்சி தாவல் நடைபெற்றதாக திமுகவை விட்டு பாஜகவில் இணைந்ததற்கான காரணங்களாக ஊகிக்கப்பட்டது. 

பிறகு பாஜகவில் இணைந்து 2 மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில், தனியார் பேருந்து ஒன்றைக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டியதான புகாரில் சூரியா கைது செய்யப்பட்டார்.  

மேலும் படிக்க | தமிழகத்தின் புது விண்வெளி மையம் தொடர்பான முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News