தமிழகத்தில் கொலை, கொள்ளை, சம்பவங்கள் நடைபெற்று வருகிறது...

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்!

Last Updated : Oct 19, 2019, 06:36 PM IST
தமிழகத்தில் கொலை, கொள்ளை, சம்பவங்கள் நடைபெற்று வருகிறது... title=

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேரணியில் பேசுகையில்., 

அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1996-ம் ஆண்டு ஜெயல‌லிதா மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டவர் சுப்பிரமணியசாமி தான், அதை முதல்வர் திரித்து சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திட்டங்கள் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரத்தில் பேசுவதற்கு தயாரா? என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக முரசொலி இருக்கும் குறித்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., ''மருத்துவர் ராமதாஸ், தற்போது "முரசொலி" இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?'' என சவால் விடுத்துள்ளார். இந்த பதிவுடன் பட்டாவின் நகலையும் அவர் இணைத்துள்ளார்.

Trending News