போட்டியிட்ட 3986-ல் 3924 இடங்களில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 3986 இடங்களில் 3924 இடங்கள் அக்கட்சி டெபாட்சிட் இழந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2022, 03:05 PM IST
  • 3986 இடங்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி
  • 62 இடங்களில் மட்டுமே டெபாட்சி பெற்றுள்ளது
  • எஞ்சிய அனைத்து இடங்களிலும் டெபாட்சிட்டை இழந்துள்ளது
போட்டியிட்ட 3986-ல் 3924 இடங்களில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி title=

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கட்சியான திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. எதிர்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. ஆனால், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கணிசமான வெற்றியை பதிவு செய்தது. 

மேலும் படிக்க | உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மக்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

ஒட்டும்மொத்தமாக வெளியாகியுள்ள முடிவுகளின்படி, திமுக 10758 இடங்களில் போட்டியிட்டு 7581 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 11538 இடங்களில் போட்டியிட்டு 1996 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி 1370 இடங்களில் போட்டியிட்டு 586 இடங்களிலும், பா.ஜ.க 5594 இடங்களில் போட்டியிட்டு 305 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதேபோல், நாம் தமிழர் கட்சி 3986 இடங்களில் போட்டியிட்டுள்ளது. அதில் அக்கட்சி 6 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. 3924 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதாவது 62 இடங்களில் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. 

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளில் 42.99 விழுக்காடு வாக்குகளை பெற்று திமுக முதல் இடத்தை பிடித்துள்ளது. 25.47 விழுக்காடு வாக்குகளை பெற்று அதிமுக 2வது இடத்தையும், 4.92 விழுக்காடு வாக்குகளை பெற்று பா.ஜ.க 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடாமல் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் 13.01 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் 3.35%, பா.ம.க - 1.54%, அமமுக 1.40%, நாம் தமிழர் 1.35 % வாக்குகளை பெற்றுள்ளன. 

மேலும் படிக்க: சென்னை மேயர் பதவி யாருக்கு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News