தகாத உறவு விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை - கணவன் மனைவி கைது

நாகையில் அரங்கேறிய பகீர் சம்பவத்தில் தொடர்புடைய கணவனும், மனைவியும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 6, 2022, 08:35 PM IST
  • காதலனை வைத்து கணவருக்கு ஸ்கெட்ச்
  • உயிரை காப்பாற்ற கொலை செய்தாரா ?
  • தப்பித்த கணவர் போலீசில் சரண்
தகாத உறவு விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை - கணவன் மனைவி கைது title=

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். 36 வயதான இவர் கப்பலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வேளாங்கண்ணி மாதாகுளம் அருகே உள்ள வினோத் விக்டர் தனக்கு சொந்தமான தனியார் விடுதியை அதே பகுதியைச் சேர்ந்த மதன் கார்த்தி என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார். இதற்கிடையே, வினோத் விக்டரின் மனைவி 36 வயதான மரியா ரூபினா மார்ட்டினா என்பவருக்கும், விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த மதன் கார்த்திக்கிற்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு, கப்பலில் இருந்து இறங்கி விக்டர் வேளாங்கண்ணிக்கு திரும்பினார். அப்போது மதன் கார்த்திக்கிடம் ஒரு வருட கால குத்தகைக்காலம் முடிந்ததால், விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவத்தன்று விடுதி தொடர்பாக பேச்சு நடத்திய பின்னர், வினோத் விக்டர் தனது மனைவியுடன், காரில் நாகையில் இருந்து வேளாங்கண்ணி திரும்பியுள்ளார்.

கள்ளகாதல் விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை

இந்த நிலையில் ஓட்டுநர் வைத்து தனது மனைவியுடன், காரில் நாகையில் இருந்து வினோத் விக்டர் வேளாங்கண்ணி திரும்பியுள்ளார்.  இதனைப் பார்த்த மனைவி மரியா ரூபினா மார்ட்டினா மற்றும் ஓட்டுநர் ஆல்வின் ஆகிய இருவரும் இறங்கி ஓடவே வினோத் விகடரின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குதலில் தப்பிக்க முயன்ற வினோத் விக்டர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அவரை விடாமல் தனது நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மதன் கார்த்திக் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே காரை மறிக்க முயன்றுள்ளார்.

கள்ளகாதல் விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் விக்டர் முன்னே வந்து காரை மறித்த மதன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அமுதன் ஆகியோரை அடித்து தூக்கினார். இதனால் இடது கை மற்றும் இடது மார்பு ஆகிய இடங்களில் படுகாயமடைந்த மதன் கார்த்திக் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும், அவருடைய நண்பர் அமுதன் படுகாயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வலது கண்ணில் ரத்தக்காயத்துடன், காருடன் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வினோத் விக்டர் ஆஜராகினார்.

மேலும் படிக்க | CRIME : கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவர் - வேலூரில் அரங்கேறிய பயங்கரம்!

தகாத உறவு விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வேளாங்கண்ணி போலிசார் வினோத் விக்டர் மற்றும் அவருடைய மனைவி மரியா ரூபினா மார்ட்டினா ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ள காதலனை வைத்து கணவரை போட்டுதல்ல மனைவி திட்டம் தீட்டியதும், அதற்கு ஓட்டுநர் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகை அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் வாகனம் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | கணவரின் ஒர்க்‌ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை காதலனாக்கிய பெண் - கட்டிலுக்காக கொலைகாரியான கதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News