நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!

குமாரபாளையம் அருகே தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் குடிநீர் உள்ள அடிப்படை வசதிகள் கூட பள்ளி நிர்வாகம் செய்து தராததால் கடும் வெயிலில் அவதி,   

Written by - Yuvashree | Last Updated : May 5, 2024, 06:21 PM IST
  • நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைப்பெற்றது
  • அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர் புகார்
  • நாடு முழுவதும் இந்த தேர்வு நடைப்பெற்றது
நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்! title=

நாடு  முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நிலவுத் தேர்வு நடைபெற்று வருகிறது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளக்கா பாளையத்தில் செயல்படும் ராயல் இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 582 மாணவ மாணவிகள் நீட் நுழைவு தேர்வை எழுதினர். மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வில் பள்ளியில் மட்டும் எழுதுவதற்கு சேலம் ஈரோடு நாமக்கல் கேரளா திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் தேர்வு எழுத வந்தனர்.

அவர்களுக்கு உறுதுணையாக பெற்றோர்களும் வந்துள்ளனர் மாணவ மாணவிகள் நிறைவு தேர்வு எழுத சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த பெற்றோர்கள் தங்குவதற்கு போதிய நிழல் வசதி கழிப்பிட வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட பள்ளி நிர்வாகம் செய்து தராததால் கடும் கோடை வெயிலிலும் பெற்றோர் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. போதிய இடவசதிகள் இருந்தும் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக செயல்படுவதால் பெற்றோர் பெரும் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

கரூரில் 2 தேர்வு மையங்களில் நீட் தேர்வு:

கரூரில் 2 தேர்வு மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது கெடுபிடிகளுக்கு இடையே தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இரண்டு தேர்வு மையங்களில் 1,936 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். 

கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள காக்காவாடி அருகே உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 736 தேர்வாளர்கள் எழுதும் நீட் தேர்வு மதியம் 1.30 மணி அளவில் தேர்வாளர்கள் உரிய சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு தேர்வு தொடங்கியது. 

தேர்வு மையத்தில் நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்று மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். குடிநீர் பாட்டில்,  கம்மல், பெல்டு அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.  நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வராதவர்களுக்கு என தனியாக சேவை மையம் ஒன்று செயல்பட்டது.

மேலும் படிக்க | Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள் - சவுக்கு சங்கர்

கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் நீட் தேர்வு மையம் கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் முன்பு சுட்டெரிக்கும் வெயிலை பொறுப்பெடுத்தாமல் பெற்றோர் மற்றும் தேர்வாளர்கள் அதிகளவில் கூடியிருந்தனர்.

இதே போல, கரூர் வெண்ணமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தில் 1200 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக கரூர் மாவட்டத்தில் இரண்டு தேர்வு மையங்களில் 1,936 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யபட்டது. 2மணிக்கு தேர்வு துவங்குவதற்கு முன், மதியம் 1:30 மணிக்கு மேல் வந்த தேர்வாளர்கள் மையத்திற்குள் அனுமதிக்க பட மாட்டார்கள் என ஏற்கனவே தெரிவித்திருந்தால், உரிய நேரத்தில் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 5.20 மணிக்கு தேர்வு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக சுட்டெரிக்கும் வெயிலை பொறுப்பெடுத்தாமல் பள்ளி வளாகம் முன்பு குவிந்தனர்.  பெற்றோருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி நிர்வாகம் குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்த போதிய வசதி செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க | நீட் தேர்வு விதிமுறைகள்: எதை கொண்டு பாேக வேண்டும்? எதை செய்யக்கூடாது? முழு விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News