புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை 2021 ஆம் ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதில் ஐஐடி மெட்ராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து 3 வருடங்களாக சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், IISc பெங்களூருவின் பெயர் இரண்டாம் இடத்திலும், IIT பம்பாய் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
நாட்டின் தலை சிறந்த மருத்துவக் கல்லூரிகள்
நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சிறந்த மருத்துவக் கல்லூரியாக எய்ம்ஸ் டெல்லி, அறிவிக்கப்பட்டது. நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல், முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (PGIMER Chandigarh) இரண்டாமிடத்திலும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
நாட்டின் தலை சிறந்த கல்லூரிகள்
கல்வி அமைச்சகத்தின் வருடாந்திர தரவரிசையில், டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி சிறந்த கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, LSR மகளிர் கல்லூரி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. லயோலா கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள்
முதல் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் 8 IIT மற்றும் 2 NIT கல்லூரிகள் உள்ளன. இந்த பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தையும், ஐஐடி டெல்லி இரண்டாம் இடத்தையும், ஐஐடி பம்பாய் மூன்றாம் இடத்தையும், ஐஐடி கான்பூர் நான்காவது இடத்திலும் உள்ளன. ஐஐடி கரக்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் என்ஐடி திருச்சிராப்பள்ளி NIT Tiruchirappalli 9வது இடத்திலும் மற்றும் என்ஐடி சுரத்கல் 10 வது இடத்தில் உள்ளது.
ALSO READ | எய்ம்ஸில் மூக்கின் வழி செலுத்தும் BBV154 கொரோனா தடுப்பு மருந்தின் 2/3ம் கட்ட பரிசோதனை
சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள்
இந்த ஆண்டின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், ஐஐஎஸ்சி பெங்களூரு ((IISc Bengaluru) முதலிடத்தையும், ஐஐடி மெட்ராஸ் இரண்டாம் இடத்தையும், ஐஐடி பம்பாய் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
நாட்டின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
IIM அகமதாபாத் சிறந்த மேலாண்மை நிறுவனம் என்ற பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில், IIM பெங்களூருவின் பெயர் இரண்டாம் இடத்திலும், IIM கல்கத்தா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
நாட்டின் சிறந்த பார்மஸி கல்லூரிகள்
டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஹம்தார்ட் (Jamia Hamdard) சிறந்த மருந்துக் கல்லூரிகளின் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெயர் இரண்டாமிடத்திலும், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ், பிலானி இரண்டாமிடத்திலும் உள்ளது.
இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள்
ஐஐஎஸ்சி பெங்களூரு (IISc Bengaluru) கல்வி அமைச்சகத்தின் வருடாந்திர தரவரிசையில் பல்கலைக்கழகங்களின் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் டெல்லி (JNU டெல்லி) இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மூன்றாவது இடத்தில் உள்ளது.
ALSO READ | பிரதமர் மோடி தலைமையில் 13வது BRICS உச்சிமாநாடு
முதல் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்:
1. ஐஐடி மெட்ராஸ்
2. ஐஐடி டெல்லி -2
3. ஐஐடி பம்பாய் -3
4. ஐஐடி கான்பூர்
5. ஐஐடி கரக்பூர்
6. ஐஐடி ரூர்கி
7. ஐஐடி கவுகாத்தி
8. ஐஐடி ஹைதராபாத்
9. என்ஐடி திருச்சப்பள்ளி
10. என்ஐடி சுரத்கல்
அனைத்து பிரிவுகளையும் சேர்த்த நிலையில் முதல் 10 கல்வி நிறுவனங்களின் பட்டியல்
1. ஐஐடி மெட்ராஸ்
2. IISc, பெங்களூர்
3. ஐஐடி பம்பாய்
4. டெல்லி ஐஐடி
5. ஐஐடி கான்பூர்
6. ஐஐடி கரக்பூர்
7. ஐஐடி ரூர்கி
8. ஐஐடி கவுகாத்தி
8. ஜேஎன்யு, டெல்லி
9. ஐஐடி ரூர்கி
10. BHU, வாரணாசி
சிறந்த 5 மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பட்டியல் (MBA கல்லூரிகள்):
1. ஐஐஎம், அகமதாபாத்
2. ஐஐஎம், பெங்களூர்
3. ஐஐஎம், கல்கத்தா
4. ஐஐஎம், கோழிக்கோடு
5. ஐஐடி, டெல்லி
ALSO READ | புதிய ITR போர்ட்டலில் சிக்கல் தீர்ந்ததா; வருமான வரித் துறை கூறுவது என்ன..!!
சிறந்த 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல்:
1. IISc, பெங்களூர்
2. ஜேஎன்யு, டெல்லி
3. BHU, வாரணாசி
4. கல்கத்தா பல்கலைக்கழகம், மேற்கு வங்காளம்
5. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
6. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, புது டெல்லி
7. மணிபால் உயர்கல்வி அகாடமி, மணிபால், கர்நாடகா
8. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
9. ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
10. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார், உத்தரபிரதேசம்
முதல் 10 கல்லூரிகளின் பட்டியல்:
1. மிராண்டா ஹவுஸ், டெல்லி
2. லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி, டெல்லி
3. லயோலா கல்லூரி, சென்னை
4. செயின்ட் சேவியர் கல்லூரி, கொல்கத்தா
5. ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திர், ஹவுரா
6. PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை
7. பிரசிடென்சி கல்லூரி