தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது...
தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாளை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள், வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்தன. உணவங்களில் பார்சல் மட்டுமே வழங்க தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் வரும் 8 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட், வழிபாட்டுத்தலங்களகளைத் திறக்கவும், உணவங்களில் 50 சதவீதம் இருக்கையில் அமர்ந்து உண்ணவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
READ | மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதிக்க கூடாது: TN Govt
மத்திய அரசு நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளநிலையில், அனைத்து மாநிலங்களும் வழிபாட்டு தலங்களை திறக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதையடுத்து, கேரளாவில் சபரிமலை திறக்கப்படும் என்றும், ஆந்திராவில் திருப்பதி கோவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து தலைமை செயலாளர் மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கோவில்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நோய் தொற்று குறையாத காரணத்தால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.