தர்மம் வென்றது- தம்பிதுரை பேட்டி

-

Last Updated : Feb 16, 2017, 02:48 PM IST
தர்மம் வென்றது- தம்பிதுரை பேட்டி title=

காஞ்சிபுரம் கூவத்தூர் சொகுசு விடுதியில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி:-

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என மக்கள் ஓட்டளித்தார்கள். ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து நடைபெறும். தர்மம் வெற்றி பெற்றுள்ளது. 

மக்களின் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவில் பிளவு கிடையாது. ஒற்றுமையாக உள்ளோம்.

சசிகலாவுக்கு வந்துள்ள சோதனையில் வெற்றி பெற்று வருவார். அவர் சிறையில் இருந்தாலும் ஆசி எங்களுக்கு உள்ளது.

அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி என்பதை புரிந்து கொள்வார்கள். அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். மக்களுக்கு நல்லது கிடைக்கும். அமைச்சரவை தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News