'சுண்ணாம்பு பட்ட கண்ணில் எதுவும் தெரியாதது' ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்!

திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணில் சுண்ணாம்பு இருப்பதால் அவருக்கு எதுவும் தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

Last Updated : Oct 30, 2019, 12:37 PM IST
'சுண்ணாம்பு பட்ட கண்ணில் எதுவும் தெரியாதது' ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்!

திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணில் சுண்ணாம்பு இருப்பதால் அவருக்கு எதுவும் தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

சென்னையில் முத்துராமலிங்க தேவரின் 112 ஆவது ஜெயந்தியையொட்டி, அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசு சார்பில் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டனர் என்றும், காழ்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்ற மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடுகின்ற வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அதிமுகவிற்கு வெற்றியை தந்திருப்பதாகவும் கூறினார். 

உலகமே பாராட்டுகின்ற வகையில் நடைபெற்ற மீட்பு பணியினை மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார் என்றால் அவர் கண்ணில் சுண்ணாம்பு தான் உள்ளது என்றும், சுண்ணாம்பு பட்ட கண்ணுக்கு எதுவுமே தெரியாது. அது போன்று தான் ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். மேலும், தமிழக அரசின் நல்ல செயல்களை மூடிமறைத்து அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றும் நினைத்தால் நிச்சயம் வருகிற தேர்தலில் ஸ்டாலின் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

 

More Stories

Trending News