சென்னை: பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்! ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். அடிமட்ட தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு சவால் விடுப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டில் நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் படிக்க | இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த ‘புரட்சி’ பட்டம்
இதனைத் தொடர்ந்து இன்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதனை அடுத்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவையில் கவுரமான பொது குழுவில் சி.வி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கபட்டு போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுத்தி தன்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது என்றும், அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பா விட்டு சொத்தா? என்று கேள்வி எழுப்பிய பன்னீர் செல்வம், என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | OPS vs EPS: பறிபோகிறது மற்றொரு முக்கிய பொறுப்பு.. ஓபிஎஸ்-க்கு போராத காலம்
அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன், ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
நான் பேச ஆரம்பித்தால், வேறு யாரும் பேச முடியாது, 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்வராக ஆக்கினார்கள். ஆனால் எடப்பாடி ராஜினாமா செய்தால் நானும் ராஜினாமா செய்கிறேன், கீழே போய் தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும் என்று கொந்தளித்து பேசினார் ஓபிஎஸ்.
பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள் அதற்கு தொண்டர்கள் முடிவு பண்ணட்டும் என மதுரையிலிருந்து ஓபிஎஸ்ஐ சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை: முதலமைச்சர் முக ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ