சென்னையில் மட்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!! டெல்லி, மும்பை, கொல்கத்தா மாற்றம் இல்லை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (20.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Updated: Nov 20, 2019, 09:21 AM IST
சென்னையில் மட்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!! டெல்லி, மும்பை, கொல்கத்தா மாற்றம் இல்லை

புது தில்லி: 6 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை, இன்று டெல்லி மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் (Petrol Prices Today) நிவாரணம் கிடைத்துள்ளது. அதாவது புதன்கிழமையான இன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 6 நாட்களாக சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 13, 15, 16, 19 பைசா என தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (20.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின் அறிக்கை படி, இன்று டெல்லி (Delhi), மும்பை (Mumbai), கொல்கத்தா (Kolkata)  மற்றும் சென்னை (Chennai ) ஆகிய நகரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.20, ரூ .79.86, ரூ .76.89 மற்றும் ரூ .77.13 விலையில் பெட்ரோல் கிடைக்கிறது. அதே நேரத்தில் டீசல் முறையே லிட்டருக்கு ரூ .65.84, ரூ .69.06, ரூ .68.25 மற்றும் ரூ .69.59 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம்செய்யப்பட்ட நடைமுறையாகும்.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை...

சென்னை _____ பெட்ரோல் - ₹ 77.13 _____ டீசல் - ₹ 69.59
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 74.20 _____ டீசல் - ₹ 65.84
மும்பை _______ பெட்ரோல் - ₹ 79.86 _____ டீசல் - ₹ 69.06
கொல்கத்தா __பெட்ரோல் - ₹  76.89_____ டீசல் - ₹ 68.25

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)