தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்

Dharmapuri Student Self Killing: தர்மபுரியில் மாணவி ஒருவர் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2022, 11:47 AM IST
  • மேலும் ஒரு மாணவி தற்கொலை
  • தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட மாணவி
  • தர்மபுரியில் நடந்த சோகம்
தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம் title=

தர்மபுரி: மாணவிகளின் தற்கொலைப் படலம் தொடர்வது தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், மற்றுமொரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 
தர்மபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இறப்பதற்கு முன்னதாக தீக்குளித்த மாணவி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி நொடியில் அளித்த வாக்குமூலம் மூலம் வெளியான தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற மாணவி உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், தீ பற்றியதும் வலி தாங்க முடியாமல் அலறியிருக்கிறார். மாணவியின் வலியுடன் கூடிய அலறல் சத்தம் தெரு முழுக்க எதிரொலித்துள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் 11ம் வகுப்பு மாணவி தூக்கில் சடலமாக கண்டெடுப்பு

மேலும் படிக்க | காரில் சென்ற பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்! 6 பேர் கைது

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்னர் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு தன்னிலை இருந்தபோது தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

முனிரத்தினம் என்பவரை தான் காதலித்து வந்ததாகக் கூறிய மாணவி, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம்! திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாக மாணவி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. மாணவியின் மரணம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவி காதலித்து வந்த முனிராஜ் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | சென்னையில் 11ம் வகுப்பு மாணவி தூக்கில் சடலமாக கண்டெடுப்பு

மேலும் படிக்க | பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை

மேலும் படிக்க | பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை: தொடரும் பரிதாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News