தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் முன்னணி சுற்றுலா தலங்களுள் ஒன்றான உதகையில், தாவரவியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | ஒரகடம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை
உதகை தாவரவியல் பூங்காவில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு உதகை அரசு மருத்துவமனை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையில் பூங்காவில் பணியாற்றிய ஊழியர்களில் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ALSO READ | Tamilnadu: 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்
இதனைத்தொடர்ந்து உதகை நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா முழுவதும் பெல் மிஸ்டர் இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதேநேரத்தில், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. தாவரவியல் பூங்காவிற்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்குமாறும் ஊழியர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR