விளைநிலத்தில் எண்ணெய்க் குழாய் பதிக்க எதிர்ப்பு! கோவை விவசாயிகள் போராட்டம்!

Opposition to Oil pipeline Project In Coimbatore:  விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு! பொதுத்துறை நிறுவனத்தை முற்றுகையிட்டு மனு அளித்த விவசாயிகள்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2024, 07:20 PM IST
  • எண்ணெய் குழாய் திட்டத்தை கைவிட வலியுறுத்தும் விவசாயிகள்!
  • கோவை விவசாயிகள் போராட்டம்
  • விளைநிலத்தில் குழாய் பதிக்க எதிர்ப்பு
விளைநிலத்தில் எண்ணெய்க் குழாய் பதிக்க எதிர்ப்பு! கோவை விவசாயிகள் போராட்டம்! title=

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருகூர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் முத்தூர் வரை விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இருகூர் முதல் முத்தூர் வரை எண்ணெய் குழாய்களை சாலையோரம் அமைத்திட வலியுறுத்தியும் வியாழனன்று இருகூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வளாகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமபந்தி முகாமிலும் விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்கனவே கோவை மாவட்டம், இருகூர் முதல் கரூர் வரை விவசாய விளைநிலங்கள் வழியாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் குழாய் அமைத்துள்ளது. இதனால் திட்டப் பகுதியில் எவ்வித விவசாயமும் செய்ய முடியாமல், வருவாய் ஈட்ட முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி!

மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் கோடிக்கணக்கில் விற்கும் போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலம் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அரசு வங்கிகள் முதல் உள்ளூர் கந்து வட்டிக்காரர் வரை யாரும் எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலத்திற்கு கடன் கொடுப்பதில்லை. இந்த நிலையில் மீண்டும்  மீண்டும் ஒரு எண்ணெய் குழாய் அமைப்பதற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது.

தற்போது இரண்டாவது திட்டம் கோவை மாவட்டம், இருகூரிலிருந்து பெங்களூரு வரை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முத்தூரிலிருந்து, பெங்களூர் வரை 270 கிலோ மீட்டர் தூரம் திட்டம் சாலை ஓரமாகவே அமைக்கப்பட உள்ளது. ஆனால் முத்தூர் வரை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாயின் அருகிலேயே மீண்டும் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை 360 கிலோமீட்டர் தூரமும், இந்தியன் ஆயில் எண்ணெய் குழாய் திட்டம் 152 கிலோமீட்டர் தூரத்திற்கும், இதே திட்டம் முத்தூர் முதல் பெங்களூர் வரையிலும் சாலை ஓரமாக அமைக்க வேண்டும் என கொள்கை முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.

ஆனாலும் இந்நிறுவனம்  மீண்டும் விவசாய நிலத்திற்குள் வருவது விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. எனவே இருகூர்- முதல் கரூர் வரை அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயை தோண்டி எடுத்து சாலை ஓரமாக அமைக்கவும், புதிதாக திட்டமிட்டுள்ள இரண்டாவது எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக அமைக்கவும் வலியுறுத்தியுள்ளோம்.  விவசாயிகளின் கோரிக்கைக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செவி சாய்க்காவிட்டால் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி செல்லும் தவெக தலைவர் நடிகர் விஜய் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News