சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி!

Kallakurichi Illicit Liquor Tragedy Latest Updates: கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை! சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2024, 12:46 PM IST
  • கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள்
  • சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்
  • முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி
சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி! title=

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியின் ஏழாவது வார்டு கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்த சாராயத்தை வாங்கி அருந்தியவர்களின் தொடர் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர், தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவில், அவர் வெளியிட்ட அறிக்கையையும் இணைத்துள்ளார்.

கள்ளச்சாரய விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை - தங்கர்பச்சான்

இந்த கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, திருபத்தூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

விஷ சாராயம் தொடர்பாக தமிழக அரசு காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவத்தின் எதிரொலியால் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினரின் விவரங்கள்:

தற்காலிக பணிநீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா - தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். திருமதி கவிதாவும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்.  மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News