வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிரபித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, வாகனம் ஓட்டும் போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் நடைமுறைக்கு ஒத்துவராது என நீதிபதி கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திப்பது கட்டாயம் என்று உத்தரவு பிறபித்துள்ளது. மேலும் அசல் லைசென்ஸ் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை என்று கூறியுள்ளது.