கபடி போட்டி நடத்துவதில் திமுகவினர் இடையே மோதல்: தாம்பரத்தில் பரபரப்பு

இரு தரப்பினரும் இடையே தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2022, 01:17 PM IST
  • தாம்பரம் அருகே கபடி போட்டி நடத்துவதில் மோதலில் ஈடுபட்ட திமுகவினர்.
  • இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம்.
  • தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் பேச்சு வார்த்தை.
கபடி போட்டி நடத்துவதில் திமுகவினர் இடையே மோதல்: தாம்பரத்தில் பரபரப்பு title=

தாம்பரம் அருகே கபடி போட்டி நடத்துவதில் திமுகவினர்  மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சு வார்த்தை நடத்த வந்த தாம்பரம் மேயர் வசந்த குமாரி மற்றும் துனை மேயர் காமராஜை திமுக ஆதர்வாளர்களே முற்றிகையிட்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

சென்னை தாம்பரம் அடுத்த டிடிகேவி நகர் அருகே உள்ள விளையாட்டு திடலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  கபடி போட்டி நடத்துவதில் திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா ஆதரவாளர் மண்டல தலைவர் காமராஜ் தரப்பினர் விளையாட்டு திடலின்  நடுவே பந்தல் அமைத்ததால் எதிர் தரப்பான அமைச்சர் தாமோ அன்பரசன் ஆதரவாளர்கள் வெளியில் இருந்த பேனரை கொண்டு வந்து விளையாட்டு திடலில் வைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

மேலும் படிக்க | இன்பநிதியும் முதலமைச்சராக வரவேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல் 

இது முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஆபாசமாக பேசி கொண்டதை தொடர்ந்து  ஒரு சிலர் பேனரை அகற்ற முயன்றனர். இதைத் தொடர்ந்து எதிர் தரப்பினர் மேடையை உடைத்து எரிந்ததால் ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது,

மேலும் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்த வந்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் காமராஜ் ஆகியோரை எதிர் தரப்பினர் முற்றுகையிட்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். பின்பு இருவரையும் போலீசார்  பாதுகாப்புடன் கூட்டத்தில் இருந்து அழைத்து சென்றனர்.

இதனால் இரு தரப்பினரும் இடையே தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் படிக்க | ஆதார் இல்லையென்றால் மானியம் இல்லை! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News